உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / நான்காவது சுற்றில் உன்னதி ஹூடா: உலக ஜூனியர் பாட்மின்டனில்...

நான்காவது சுற்றில் உன்னதி ஹூடா: உலக ஜூனியர் பாட்மின்டனில்...

கவுகாத்தி: உலக ஜூனியர் பாட்மின்டன் ஒற்றையர் பிரிவு 4வது சுற்றுக்கு இந்தியாவின் உன்னதி ஹூடா, தான்வி சர்மா முன்னேறினர்.அசாமின் கவுகாத்தியில், உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் உன்னதி ஹூடா, அமெரிக்காவின் ஆலிஸ் வாங் மோதினர். இதில் உன்னதி ஹூடா 15-8, 15-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று 'ரவுண்டு-16' போட்டிக்கு முன்னேறினார்.மற்றொரு 3வது சுற்றுப் போட்டியில் இந்தியாவின் தான்வி சர்மா 15-12, 15-7 என, இந்தோனேஷியாவின் வினார்டோவை வென்றார். மற்றொரு போட்டியில் இந்திய வீராங்கனை ரக் ஷிதா ஸ்ரீ 11-15, 15-5, 15-8 என்ற கணக்கில் சிங்கப்பூரின் ஆலியா ஜகாரியாவை தோற்கடித்தார்.ஆண்கள் ஒற்றையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் ஞான தத்து 11-15, 15-6, 15-11 என, சகவீரர் சூர்யாக் ஷ் ரவாத்தை வீழ்த்தி 'ரவுண்டு-16' போட்டிக்குள் நுழைந்தார். மற்ற இந்திய வீரர்களான ரவுனக் சவுகான், லால்தாசுவாலா, 3வது சுற்றில் தோல்வியடைந்தனர்.கலப்பு இரட்டையர் பிரிவு 3வது சுற்றில் இந்தியாவின் பவ்யா சாப்ரா, விஷாகா ஜோடி 15-13, 15-11 என டென்மார்க்கின் ரோமர், ஜாஸ்மின் ஜோடியை வீழ்த்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ