உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பாட்மின்டன் / உலக ஜூனியர் பாட்மின்டன்: அரையிறுதியில் தான்வி

உலக ஜூனியர் பாட்மின்டன்: அரையிறுதியில் தான்வி

கவுகாத்தி: உலக ஜூனியர் பாட்மின்டன் அரையிறுதிக்கு இந்திய வீராங்கனை தான்வி சர்மா முன்னேறினார்.அசாமின் கவுகாத்தியில், உலக ஜூனியர் பாட்மின்டன் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தான்வி சர்மா, ஜப்பானின் சகி மட்சுமோடோ மோதினர். தான்வி 13-15, 15-9, 15-10 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதன்மூலம் இம்முறை இந்தியாவுக்கு பதக்கத்தை உறுதி செய்தார் தான்வி. தவிர இவர், 17 ஆண்டுகளுக்கு பின் இத்தொடரில் பதக்கம் வெல்லும் இந்திய வீராங்கனையாகிறார். கடைசியாக 2008ல் புனேயில் நடந்த தொடரில் இந்தியாவின் செய்னா நேவல் தங்கம் வென்றிருந்தார்.மற்றொரு காலிறுதியில் இந்திய வீராங்கனை உன்னதி ஹூடா 12-15, 13-15 என்ற நேர் செட் கணக்கில் தாய்லாந்தின் அன்யாபட் பிச்சிட்போனிடம் தோல்வியடைந்து வெளியேறினார்.கலப்பு இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் பவ்யா சாப்ரா, விஷாகா ஜோடி 9-15, 7-15 என சீனதைபேயின் ஹங் பிங் பூ, சோ யுன் ஆன் ஜோடியிடம் தோல்வியடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை