உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆப்கானிஸ்தான் அணி இமாலய வெற்றி: 54 ரன்னில் சுருண்டது ஜிம்பாப்வே

ஆப்கானிஸ்தான் அணி இமாலய வெற்றி: 54 ரன்னில் சுருண்டது ஜிம்பாப்வே

ஹராரே: இரண்டாவது ஒருநாள் போட்டியில் அசத்திய ஆப்கானிஸ்தான் அணி 232 ரன் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்றது. ஜிம்பாப்வே அணி 54 ரன்னுக்கு சுருண்டது.ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் பாதியில் ரத்தானது. ஹராரேயில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற ஜிம்பாப்வே அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.ஆப்கானிஸ்தான் அணிக்கு செடிகுல்லா அடல், அப்துல் மாலிக் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. சமீபத்திய ஐ.பி.எல்., வீரர்கள் ஏலத்தில் விலை போகாத செடிகுல்லா சதம் விளாசினார். அப்துல் மாலிக் அரைசதம் கடந்தார். முதல் விக்கெட்டுக்கு 191 ரன் சேர்த்த போது அப்துல் (84) அவுட்டானார். அபாரமாக ஆடிய செடிகுல்லா (104) நம்பிக்கை தந்தார். கேப்டன் ஹஷ்மதுல்லா ஷாஹிதி (29*) ஓரளவு கைகொடுத்தார்.ஆப்கானிஸ்தான் அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 286 ரன் எடுத்தது.சவாலான இலக்கை விரட்டிய ஜிம்பாப்வே அணி துவக்கத்தில் இருந்தே தடுமாறியது. பென் கர்ரான் (0), மருமணி (3), கேப்டன் கிரெய்க் எர்வின் (4) சொற்ப ரன்னில் அவுட்டாகினர். சீன் வில்லியம்ஸ் (16), சிக்கந்தர் ராஜா (19*) மட்டும் இரட்டை இலக்க ரன் எடுத்தனர்.ஜிம்பாப்வே அணி 17.5 ஓவரில் 54 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. ஆப்கானிஸ்தான் சார்பில் நவீத் ஜத்ரன், காசன்பர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.

232 ரன்

ஜிம்பாப்வேவை வீழ்த்திய ஆப்கானிஸ்தான் அணி (232 ரன் வித்தியாசம்), ஒருநாள் அரங்கில் ரன் அடிப்படையில் தனது சிறந்த வெற்றியை பதிவு செய்தது. இதற்கு முன் சார்ஜா போட்டியில் (செப். 20), 177 ரன் வித்தியாசத்தில் தென் ஆப்ரிக்காவை வென்றிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை