புதுடில்லி: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட இந்தியாவின் அன்ஷுமன் கெய்க்வாட், சிகிச்சை பலனின்றி காலமானார்.இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அன்ஷுமன் கெய்க்வாட் 71. கடந்த 1974ல் கோல்கட்டா, ஈடன் கார்டனில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான டெஸ்டில் அறிமுகமானார். பின், 1975ல் லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் நடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதன்முறையாக பங்கேற்றார். 1987ல் அசாமின் கவுகாத்தியில் நடந்த வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான ஒருநாள் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இருந்து ஓய்வு பெற்றார். மொத்தம் 40 டெஸ்ட் (1985 ரன், 2 சதம், 10 அரைசதம், 2 விக்கெட்), 15 ஒருநாள் போட்டிகளில் (269 ரன், ஒரு அரைசதம், ஒரு விக்கெட்) பங்கேற்றார். தவிர இவர், 206 முதல் தரம் (12,136 ரன், 34 சதம், 47 அரைசதம், 143 விக்கெட்), 55 'லிஸ்ட் ஏ' (1601 ரன், 2 சதம், 12 அரைசதம், 22 விக்கெட்) போட்டிகளிலும் விளையாடினார்.பயிற்சியாளராக...: ஓய்வுக்கு பின், இந்திய அணியின் தேர்வுக்குழு தலைவர், பயிற்சியாளராக (1997-1999, 2000) அன்ஷுமன் கெய்க்வாட் இருந்தார். இவருக்கு 2018ல் இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் சி.கே. நாயுடு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது.புற்றுநோய் பாதிப்பு: ரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அன்ஷுமன் கெய்க்வாட், லண்டன் கிங்ஸ் காலேஜ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். கடந்த மாதம் தாயகம் திரும்பிய அன்ஷுமன் கெய்க்வாட், குஜராத் மாநிலம் வதோதராவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி (ஜூலை 31) காலமானார். இவரது உடல் நேற்று தகனம் செய்யப்பட்டது. 'பயோ-டேட்டா'பெயர்: அன்ஷுமன் கெய்க்வாட்பிறந்த நாள்: 23-09-1952பிறந்த இடம்: மும்பை, இந்தியாவிளையாட்டு: கிரிக்கெட்'ரோல்': பேட்ஸ்மேன்பேட்டிங் ஸ்டைல்: வலது கைபவுலிங் ஸ்டைல்: வலது கை சுழற்பந்துவீச்சுமறைவு: 31-07-2024இடம்: வதோதரா, குஜராத்பிரதமர் இரங்கல்அன்ஷுமன் கெய்க்வாட்டின் மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர்.பிரதமர் மோடி: இந்திய கிரிக்கெட்டின் வளர்ச்சிக்கு அன்ஷுமன் கெய்க்வாட்டின் பங்களிப்பு என்றும் நினைவில் இருக்கும். திறமையான வீரர், சிறந்த பயிற்சியாளரான இவரது மறைவு வேதனை அளிக்கிறது. அவரது குடும்பத்தினருக்கும், ரசிகர்களுக்கும் இரங்கல். ஓம் சாந்தி.ஜெய் ஷா, பி.சி.சி.ஐ., தலைவர்: அன்ஷுமன் கெய்க்வாட்டை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கல். இவரது மறைவு கிரிக்கெட் அரங்கில் அதிர்ச்சி ஏற்படுத்தி உள்ளது. அவரது ஆத்மா சாந்தியடையட்டும்.கங்குலி, முன்னாள் கேப்டன்: அன்ஷு பாய் ஆத்மா சாந்தியடையட்டும். இச்செய்தி வேதனை அளிக்கிறது.ஹர்பஜன் சிங், முன்னாள் வீரர்: இவரது பயிற்சியின் கீழ் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமானதை என்றும் மறக்க முடியாது. ஒரு முழுமையான ஜென்டில்மேன். குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.தந்தை வழியில்...அன்ஷுமனின் தந்தை தத்தா கெய்க்வாட், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர். உள்ளூர் போட்டியில் பரோடா அணிக்காக (1948-1963) விளையாடிய தத்தா, இந்தியாவுக்காக 11 டெஸ்டில் (1952-1961) பங்கேற்றார். தவிர இவர், 110 முதல் தர போட்டியிலும் விளையாடி உள்ளார். பரோடாவில் 1928ல் பிறந்த இவர், தனது 95வது வயதில் (13-02-2024) காலமானார்.201 ரன்பாகிஸ்தானுக்கு எதிராக ஜலந்தரில் நடந்த டெஸ்டில் (1983, செப். 24-29), 671 நிமிடம் 'பேட்' செய்த அன்ஷுன், இரட்டை சதம் (201) விளாசினார். இதன்மூலம் டெஸ்ட் அரங்கில் தனது சிறந்த ரன்னை பதிவு செய்தார். இப்போட்டி 'டிரா' ஆனது.