உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஷஸ்: ஜோஷ் டங் தேர்வு: இங்கிலாந்து அணி அறிவிப்பு

ஆஷஸ்: ஜோஷ் டங் தேர்வு: இங்கிலாந்து அணி அறிவிப்பு

அடிலெய்டு: ஆஷஸ் 3வது டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணியில் ஜோஷ் டங் இடம் பெற்றுள்ளார்.ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடக்கிறது. முதலிரண்டு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட் நாளை அடிலெய்டில் துவங்குகிறது. இப்போட்டிக்கான இங்கிலாந்து 'லெவன்' அணி அறிவிக்கப்பட்டது.முதலிரண்டு டெஸ்டில் பெரிய அளவில் சோபிக்காத (3 விக்கெட்) வேகப்பந்துவீச்சாளர் அட்கின்சன் 27, நீக்கப்பட்டார். இவருக்கு பதிலாக மற்றொரு வேகப்பந்துவீச்சாளர் ஜோஷ் டங் 28, தேர்வானார். ஸ்பெஷலிஸ்ட் சுழற்பந்துவீச்சாளர் சோயப் பஷீர் 22, மீண்டும் தேர்வு செய்யப்படவில்லை.இங்கிலாந்து அணி: பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் கிராலே, பென் டக்கெட், போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித், வில் ஜாக்ஸ், ஜோஷ் டங், பிரைடன் கார்ஸ், ஜோப்ரா ஆர்ச்சர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை