ஆஸ்திரேலியா மீண்டும் வெற்றி: இங்கிலாந்து அணி ஏமாற்றம்
லீட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 68 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது.இங்கிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலிய அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் ஆஸ்திரேலியா வென்றது. லீட்சில் 2வது போட்டி நடந்தது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ ஷார்ட் (29), டிராவிஸ் ஹெட் (29) நல்ல துவக்கம் கொடுத்தனர். ஸ்டீவ் ஸ்மித் (4) ஏமாற்றினார். கேப்டன் மிட்சல் மார்ஷ் (60), அலெக்ஸ் கேரி (74) அரைசதம் கடந்தனர். ஆஸ்திரேலிய அணி 44.4 ஓவரில் 270 ரன் எடுத்தது.பின் களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு பென் டக்கெட் (32), ஜேமி ஸ்மித் (49) ஆறுதல் தந்தனர். மற்றவர்கள் ஏமாற்ற இங்கிலாந்து அணி 40.2 ஓவரில் 202 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. ஆஸ்திரேலியா சார்பில் ஸ்டார்க் 3 விக்கெட் வீழ்த்தினார். ஆஸ்திரேலிய அணி 2-0 என முன்னிலை பெற்றது.