உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பாபர் ஆசம் விலகல்

பாபர் ஆசம் விலகல்

கராச்சி: உள்ளூர் 'டி-20' தொடரில் இருந்து பாகிஸ்தானின் பாபர் ஆசம் விலகினார்.நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, 5 'டி-20' (மார்ச் 16, 18, 21, 23, 26), 3 ஒருநாள் போட்டிகள் (மார்ச் 29, ஏப். 2, 5) கொண்ட தொடரில் பங்கேற்கிறது. 'டி-20' தொடருக்கான பாகிஸ்தான் அணியில் முன்னாள் கேப்டன் பாபர் ஆசம், கேப்டன் முகமது ரிஸ்வான், வேகப்பந்துவீச்சாளர் நசீம் ஷா சேர்க்கப்படவில்லை. ஒருநாள் தொடருக்கு மட்டும் தேர்வாகினர்.இவர்கள் மூவரும், தேசிய 'டி-20' சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்பர் என, பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பாபர் ஆசம், நசீம் ஷா, இத்தொடரில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளனர். ஒருநாள் தொடருக்கு தயாராகும் விதமாக விலகியதாக கூறப்படுகிறது. ஆனால் அடுத்த மாதம் நடக்கவுள்ள பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கு தயாராகவே இவர்கள் விலகியதாக, முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டினர். பாபர் ஆசம், கடந்த 2020ம் ஆண்டு முதல் உள்ளூர் முதல் தர போட்டியில் விளையாடவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை