மேலும் செய்திகள்
வங்கதேச அணி அறிவிப்பு: இந்திய டெஸ்ட் தொடருக்கு
12-Sep-2024
சென்னை: டெஸ்ட், 'டி-20' தொடரில் பங்கேற்பதற்காக வங்கதேச அணியினர் நேற்று சென்னை வந்தனர்.இந்திய மண்ணில் வங்கதேச அணி, இரண்டு டெஸ்ட், மூன்று 'டி-20' போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், வரும் செப். 19ல் சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக ஷான்டோ தலைமையிலான வங்கதேச அணியினர் சென்னை வந்தனர். விமான நிலையம் வந்த வங்கதேச அணியினர், பலத்த பாதுகாப்புடன் ஓட்டலுக்கு அழைத்து செல்லப்பட்டனர். ஓட்டலிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. வங்கதேச அணியினர் பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.வங்கதேச கேப்டன் நஜ்முல் ஹொசைன் ஷான்டோ கூறுகையில், ''சமீபத்தில் பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரை கைப்பற்றிய அனுபவம் இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக செயல்பட உதவும். இரண்டு போட்டியிலும் வெற்றி பெற முயற்சிப்போம்,'' என்றார்.இவ்விரு அணிகள் மோதும் 2வது டெஸ்ட் கான்பூரில் (செப். 27 - அக். 1) நடக்கவுள்ளது. மூன்று 'டி-20' போட்டிகள் குவாலியர் (அக். 6), டில்லி (அக். 9), ஐதராபாத்தில் (அக். 12) நடக்கவுள்ளன.
12-Sep-2024