உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோப்பை வென்றது வங்கதேசம்: ஆப்கானிஸ்தான் அணி ஏமாற்றம்

கோப்பை வென்றது வங்கதேசம்: ஆப்கானிஸ்தான் அணி ஏமாற்றம்

சார்ஜா: மூன்றாவது 'டி-20' போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வங்கதேச அணி, 3-0 என தொடரை கைப்பற்றி கோப்பை வென்றது.ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (யு.ஏ.இ.,) சென்றுள்ள ஆப்கானிஸ்தான், வங்கதேச அணிகள் 3 போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்றன, முதலிரண்டு போட்டியில் வென்ற வங்கதேச அணி, 2-0 என ஏற்கனவே தொடரை கைப்பற்றியது. மூன்றாவது போட்டி சார்ஜாவில் நடந்தது. 'டாஸ்' வென்ற வங்கதேச அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.ஆப்கானிஸ்தான் அணிக்கு ரஹ்மானுல்லா குர்பாஸ் (12), இப்ராஹிம் ஜத்ரன் (7) ஏமாற்றினர். செதிகுல்லா அடால் (28), டார்விஷ் ரசூலி (32) ஓரளவு கைகொடுத்தனர். முகமது நபி (1), கேப்டன் ரஷித் கான் (12), அஸ்மதுல்லா உமர்சாய் (3) சோபிக்கவில்லை. ஆப்கானிஸ்தான் அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 143 ரன் எடுத்தது. முஜீப் உர் ரஹ்மான் (23), பஷிர் அகமது (2) அவுட்டாகாமல் இருந்தனர்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தன்ஜித் ஹசன் (33) நம்பிக்கை தந்தார். பர்வேஸ் ஹொசைன் (14), கேப்டன் ஜாக்கர் அலி (10) நிலைக்கவில்லை. சைப் ஹசன் அரைசதம் கடந்து வெற்றிக்கு உதவினார். வங்கதேச அணி 18 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 144 ரன் எடுத்து வெற்றி பெற்றது. சைப் ஹசன் (64), நுாருல் ஹசன் (10) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ