உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோப்பை வென்றது வங்கதேசம்: இலங்கை அணி ஏமாற்றம்

கோப்பை வென்றது வங்கதேசம்: இலங்கை அணி ஏமாற்றம்

சாட்டோகிராம்: இலங்கைக்கு எதிரான 3வது ஒருநாள் போட்டியில் அசத்திய வங்கதேச அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. தொடரை 2-1 எனக் கைப்பற்றி கோப்பை வென்றது.வங்கதேசம் சென்ற இலங்கை அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது. முதலிரண்டு போட்டிகளின் முடிவில் தொடர் 1-1 என சமநிலையில் இருந்தது. நேற்று சாட்டோகிராமில் மூன்றாவது போட்டி நடந்தது.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த இலங்கை அணிக்கு கேப்டன் குசால் மெண்டிஸ் (29), சரித் அசலன்கா (37) நிலைக்கவில்லை. ஜனித் லியானகே சதம் விளாசினார். இலங்கை அணி 50 ஓவரில் 235 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. ஜனித் (101) அவுட்டாகாமல் இருந்தார். வங்கதேசம் சார்பில் டஸ்கின் அகமது 3 விக்கெட் வீழ்த்தினார்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய வங்கதேச அணிக்கு தன்சித் ஹசன் (84) அரைசதம் கடந்தார். முஷ்பிகுர் ரஹிம், ரிஷாத் ஹொசைன் ஜோடி நம்பிக்கை தந்தது. ஹசரங்கா வீசிய 40வது ஓவரில் வரிசையாக 2 சிக்சர், 3 பவுண்டரி அடித்தார் ரிஷாத். மகேஷ் தீக்சனா பந்தை பவுண்டரிக்கு விரட்டிய முஷ்பிகுர் வெற்றியை உறுதி செய்தார்.வங்கதேச அணி 40.2 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 237 ரன் எடுத்து வெற்றி பெற்றது. முஷ்பிகுர் (37), ரிஷாத் (48) அவுட்டாகாமல் இருந்தனர்.

சவுமியா காயம்

பவுண்டரியை தடுக்க முயன்ற போது வங்கதேச வீரர் சவுமியா சர்க்காரின் தலை தரையில் பலமாக மோதியது. இதனால் கழுத்து, தலைவலியால் பாதிக்கப்பட்ட இவருக்கு லேசான பார்வை குறைபாடும் உண்டானது. இதனையடுத்து 'பெவிலியன்' திரும்பிய சவுமியா முதலுதவி எடுத்துக் கொண்டார். ஐ.சி.சி., விதிமுறைப்படி ஒரு வீரருக்கு தலையில் அடிபட்டு மூளை அதிர்ச்சி ஏற்பட்டால், அவருக்கு பதிலாக மாற்று வீரரை களமிறக்க அனுமதிக்கப்படுவர். இதன்படி மாற்று வீரராக தன்சித் ஹசன் அனுமதிக்கப்பட்டார். பேட்டிங்கில் அசத்திய தன்சித் 84 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ