உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பி.சி.சி.ஐ., செயலராக ரோஹன்

பி.சி.சி.ஐ., செயலராக ரோஹன்

புதுடில்லி: பி.சி.சி.ஐ., புதிய செயலராக ரோஹன் ஜெட்லி தேர்வு செய்யப்பட உள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சேர்மனாக கிரெக் பார்கிலே (நியூசி.,) உள்ளார். இவரது பதவிக்காலம், வரும் நவம்பர் மாதம் முடிகிறது. புதிய சேர்மனாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) செயலர் ஜெய் ஷா, தேர்வு செய்யப்பட உள்ளார். இவருக்கு ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உட்பட பல்வேறு கிரிக்கெட் போர்டு ஆதரவு தெரிவித்துள்ளன. ஜெய் ஷா, ஐ.சி.சி., பதவிக்கு சென்றால், பி.சி.சி.ஐ., செயலராக யார் தேர்வு செய்யப்படுவார் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது டில்லி கிரிக்கெட் சங்க தலைவராக உள்ள ரோஹன் ஜெட்லி, பி.சி.சி.ஐ., புதிய செயலராக தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளது. இவர், மறைந்த, முன்னாள் மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியின் மகன்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ