துபாயில் இந்திய அணி வீரர்கள் * சாம்பியன்ஸ் டிராபி தொடருக்காக...
துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்கும் இந்திய அணி வீரர்கள் துபாய் சென்றனர்.ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி தொடர் (பிப். 19-மார்ச் 9) பாகிஸ்தானில் நடக்க உள்ளது. இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பங்கேற்க உள்ளன. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது.'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் போட்டியில் வங்கதேசத்தை (பிப். 20) சந்திக்கிறது. அடுத்து பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளுடன் மோத உள்ளது.இதற்கான ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வீரர்கள் நேற்று மும்பையில் இருந்து துபாய் சென்றடைந்தனர். இங்கு பயிற்சி போட்டியில் பங்கேற்காத இந்திய அணியினர், நேரடியாக வங்கதேசத்தை எதிர்கொள்ள உள்ளனர்.கடைசி வாய்ப்புசமீபத்திய இங்கிலாந்து தொடரில் நம்பிக்கை தந்த கோலி (அரைசதம்), ரோகித் (சதம்) மீண்டும் ரன்குவிப்பில் ஈடுபட்டால், இந்திய அணி சாம்பியன் ஆகலாம். தவிர, இவர்களின் எதிர்காலத்தை முடிவு செய்யும் தொடராகவும் இது உள்ளது.காத்திருக்கும் சாதனைகோலி (285 இன்னிங்சில் 13,963 ரன்), இன்னும் 37 ரன் எடுக்கும் பட்சத்தில் ஒருநாள் அரங்கில், அதிவேகமாக 14,000 ரன்கள் எடுத்த வீரர் ஆகலாம்.* சாம்பியன்ஸ் டிராபியில் அதிக ரன் குவித்த இந்திய வீரர்களில் தவான் (10ல் 701) முதலிடத்தில் உள்ளார். கோலி (13ல் 529) 173 ரன் எடுத்தால் 'நம்பர்-1' ஆகலாம்.* ரோகித், இன்னும் 12 ரன் எடுத்தால் ஒருநாள் அரங்கில் 11,000 ரன் எடுத்த 10வது வீரர் ஆகலாம்.