உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சாம்பியன்ஸ் டிராபி வென்றால் பரிசு ரூ. 19.46 கோடி * 53 சதவீதம் உயர்ந்த பரிசுத் தொகை

சாம்பியன்ஸ் டிராபி வென்றால் பரிசு ரூ. 19.46 கோடி * 53 சதவீதம் உயர்ந்த பரிசுத் தொகை

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 19.46 கோடி பரிசு தரப்பட உள்ளது. இது 53 சதவீதம் உயர்வு ஆனது. ஐ.சி.சி., சாம்பியன்ஸ் டிராபி 9வது சீசன், பாகிஸ்தான், துபாயில், பிப். 19-மார்ச் 9ல் நடக்கவுள்ளது. கடந்த 1996க்குப் பின் பாகிஸ்தானில் முதன் முறையாக ஐ.சி.சி., தொடர் நடக்க உள்ளது. போட்டிகள் பாகிஸ்தானில் கராச்சி, லாகூர், ராவல்பிண்டியில் நடக்கும். 2023ல் இந்தியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் 'டாப்-8' இடம் பிடித்த இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா உள்ளிட்ட 8 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, பங்கேற்க உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடம் பெறும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் இத்தொடருக்கு தகுதி பெறவில்லை. இரண்டு பிரிவுஇந்திய அணி 'ஏ' பிரிவில் இடம் பெற்றுள்ளது. தனது முதல் போட்டியில் பிப். 20ல் வங்கதேசத்தை சந்திக்கிறது. அடுத்து பாகிஸ்தான் (பிப். 23), நியூசிலாந்து (மார்ச் 2) அணிகளுடன் மோத உள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் துபாயில் நடத்தப்படுகிறது. இத்தொடருக்கான பரிசுத் தொகை விபரம் வெளியானது. தொடரின் மொத்த பரிசுத் தொகை 2017ல் தரப்பட்டதை விட, 53 சதவீதம் அதிகரிக்கப்பட்டது. இம்முறை அதிகபட்சம் ரூ. 59.90 கோடி வழங்கப்பட உள்ளது. தொடரில் பங்கேற்கும் 8 அணிக்கும் தலா ரூ. 1.08 கோடி கிடைக்கும்.பைனலில் சாதித்து கோப்பை வெல்லும் அணிக்கு ரூ. 19.46 கோடி தரப்படுகிறது. இரண்டாவது இடம் பெறும் அணி ரூ. 9.73 கோடி கொண்டு செல்லும். தவிர, அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ. 4.86 கோடி கிடைக்கும். யாருக்கு எவ்வளவுஇடம் பரிசு முதலிடம் ரூ. 19.46 கோடி2வது இடம் ரூ. 9.73 கோடிஅரையிறுதி (2) ரூ. 4.86 கோடி5, 6வது இடம் ரூ. 3.04 கோடி7, 8வது இடம் ரூ. 1.22 கோடி* தவிர லீக் சுற்றில் பெறும் ஒவ்வொரு வெற்றிக்கும் ரூ. 29.5 லட்சம் தரப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை