உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சாம்பியன்ஸ் டிராபி சர்ச்சைக்கு தீர்வு

சாம்பியன்ஸ் டிராபி சர்ச்சைக்கு தீர்வு

துபாய்: சாம்பியன்ஸ் டிராபி சர்ச்சை தீர்ந்தது. இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடத்தப்படலாம். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் நடத்தப்படுகிறது. ஒருநாள் தரவரிசையில் 'டாப்-8' இடத்தில் உள்ள அணிகள் பங்கேற்கும். இத்தொடர் பாகிஸ்தானில் வரும், 2025, பிப். 19-மார்ச் 9ல் நடக்க உள்ளது. ஆனால், பாதுகாப்பு காரணங்களுக்காக பாகிஸ்தான் சென்று விளையாட இந்தியா மறுத்துவிட்டது. இந்த சர்ச்சைக்கு ஐ.சி.சி., தீர்வு கண்டது. இதுகுறித்து ஐ.சி.சி., வெளியிட்ட அறிக்கையில்,' 2024 முதல் 2027 வரை இந்தியாவில் நடக்கும் ஐ.சி.சி., தொடர்களில் பாகிஸ்தானும், பாகிஸ்தானில் நடக்கும் தொடரில் இந்திய அணியும் பங்கேற்க செல்லாது. மாறாக இந்த அணிகள் பங்கேற்கும் போட்டிகள் பொதுவான இடத்தில் நடத்தப்படும். விரைவில் சாம்பியன்ஸ் டிராபி அட்டவணை வெளியாகும்,' என தெரிவிக்கப்பட்டுள்ளது.துபாயில் போட்டிஇதன் படி, வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணி பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சில் (துபாய்) நடக்க வாய்ப்புள்ளது. தவிர, 2026ல் இந்தியா-இலங்கை இணைந்து பெண்களுக்கான ஒருநாள் உலக கோப்பை நடத்த உள்ளன. இதில் பாகிஸ்தான் பங்கேற்கும் போட்டிகள் இலங்கையில் நடக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை