மேலும் செய்திகள்
இளம் இந்தியா ரன் குவிப்பு: வைபவ், திரிவேதி சதம்
01-Oct-2025
லாஸ் வேகாஸ்: கோபா கால்பந்து லீக் போட்டியில் ஈகுவடார் அணி 3-1 என ஜமைக்காவை வீழ்த்தியது.அமெரிக்காவில் 'கோபா அமெரிக்கா' கால்பந்து தொடரின் 48 வது சீசன் நடக்கிறது. நேற்று நடந்த 'பி' பிரிவு லீக் போட்டியில் ஈகுவடார், ஜமைக்கா அணிகள் மோதின. 13வது நிமிடத்தில் ஜமைக்கா வீரர் கசே பால்மர் 'சேம் சைடு' கோல் அடித்தார். ஸ்டாப்பேஜ் நேரத்தில் (45+4வது நிமிடம் ஈகுவடார் அணிக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதில் கெண்ட்ரி பயஸ்,கோல் அடிக்க, ஈகுவடார் 2-0 என முன்னிலை பெற்றது.54வது நிமிடத்தில் ஜமைக்கா வீரர் மிகைய்ல் அன்டோனியா, பந்தை கோல் ஏரியாவுக்குள் அடித்தார், பந்து கோல் போஸ்ட்டில் பட்டு அதிர்ஷ்டவசமாக உள்ளே சென்று கோல் ஆனது. இரண்டாவது பாதியின் ஸ்டாப்பேஜ் நேரத்தில், 90+1வது நிமிடத்தில் ஈகுவடார் வீரர் கார்லஸ் கொடுத்த பந்தை வாங்கிய ஆலன் மிண்டா, கோல் அடித்தார்.முடிவில் ஈகுவடார் அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது. 2 போட்டியில் தலா ஒரு வெற்றி, தோல்வியுடன் 3 புள்ளி பெற்ற ஈகுவடார் அணி, காலிறுதி வாய்ப்பை தக்கவைத்தது. 2 போட்டியிலும் தோற்ற ஜமைக்கா, வாய்ப்பை இழந்தது.காலிறுதியில் வெனிசுலாகலிபோர்னியாவில் நடந்த போட்டியில் மெக்சிகோ ('நம்பர்-15'), வெனிசுலா ('நம்பர்-54') அணிகள் மோதின. இரண்டாவது பாதியில் 57 வது நிமிடம் மெக்சிகோ வீரர் ஜூலியன், கோல் ஏரியாவுக்குள் முரட்டுத்தனமாக செயல்பட, வெனிசுலாவுக்கு 'பெனால்டி' வாய்ப்பு கிடைத்தது. இதில் சாலமன் ரான்டன் கோல் அடித்து உதவினார். முடிவில் மெக்சிகோ அணி 0-1 என தோற்றது. 2 போட்டியில் வெற்றி பெற்ற வெனிசுலா (6 புள்ளி) காலிறுதிக்கு முன்னேறியது.
01-Oct-2025