ஜிம்பாப்வே ரன் குவிப்பு * பென் கர்ரான் சதம்
ஹராரே: ஜிம்பாப்வே சென்றுள்ள ஆப்கானிஸ்தான் அணி, ஹராரேயில் நடக்கும் டெஸ்டில் விளையாடுகிறது.முதல் இன்னிங்சில் ஆப்கானிஸ்தான் அணி 127 ரன் எடுத்தது. முதல் நாள் முடிவில் ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 130/2 ரன் எடுத்து, 3 ரன் முன்னிலை பெற்றிருந்தது. பென் கர்ரான் (52), பிரண்டன் டெய்லர் (18) அவுட்டாகாமல் இருந்தனர்.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. டெய்லர் 32 ரன் எடுத்தார். கேப்டன் கிரெய்க் எர்வின் (5) ஏமாற்றினார். சிறப்பான ஆட்டத்தை தொடர்ந்த கர்ரான், சதம் அடித்தார். இவருக்கு 'கம்பெனி' கொடுத்த சிக்கந்தர் ராஜா அரைசதம் எட்டினார். 5வது விக்கெட்டுக்கு 99 ரன் சேர்த்த போது சிக்கந்தர் (65) அவுட்டானார். கர்ரான் 121 ரன் எடுத்து வெளியேறினார்.பின் வரிசையில் முசரபானி (5), சிவாங்கா (5) கைவிட்டனர். ஜிம்பாப்வே அணி முதல் இன்னிங்சில் 359 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பிராட் ஈவன்ஸ் (35) அவுட்டாகாமல் இருந்தார். ஜிம்பாப்வே அணி 232 ரன் முன்னிலை பெற்றது.