உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ராகுல், சாய் சுதர்சன் சதம் * இந்தியா ஏ கலக்கல் வெற்றி

ராகுல், சாய் சுதர்சன் சதம் * இந்தியா ஏ கலக்கல் வெற்றி

லக்னோ: லக்னோ டெஸ்டில், இந்திய 'ஏ' அணி, 5 விக்கெட்டில் ஆஸ்திரேலியா 'ஏ' அணியை வீழ்த்தியது. ராகுல், சாய் சுதர்சன் சதம் அடித்து கைகொடுத்தனர்.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி, அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா நான்கு நாள்) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்றது. முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டி லக்னோவில் நடந்தது. முதல் இன்னிங்சில் ஆஸ்திரேலிய 'ஏ' 420, இந்திய 'ஏ' 194 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி 185 ரன் எடுத்தது.அடுத்து 412 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்தியா 'ஏ', மூன்றாவது நாள் முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 169/2 ரன் எடுத்து, 242 ரன் பின்தங்கி இருந்தது.இரண்டு சதம்நேற்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. மானவ் (5) நிலைக்கவில்லை. சாய் சுதர்சன் (100) சதம் அடித்து அவுட்டானர். ராகுல் சதம் விளாசினார். ஜுரல் அரைசதம் கடந்தார். 5வது விக்கெட்டுக்கு 115 ரன் சேர்த்த போது, ஜுரல் (56) அவுட்டானார்.மறுபக்கம் ராகுல் உறுதியான ஆட்டத்தை வெளிப்படுத்த, இந்திய 'ஏ' அணி, இரண்டாவது இன்னிங்சில் 413/5 ரன் எடுத்து, வெற்றி பெற்றது. ராகுல் (176 ரன்), நிதிஷ் குமார் (16) அவுட்டாகாமல் இருந்தனர். தொடரை 1-0 என இந்தியா 'ஏ' கைப்பற்றியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை