5 விக்கெட் சாய்த்தார் மானவ் * ஆஸி., ஏ அணி ரன் குவிப்பு
லக்னோ: ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான லக்னோ போட்டியில் இந்தியாவின் மானவ் சுதர், 5 விக்கெட் சாய்த்தார்.இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி, அதிகாரப்பூர்வமற்ற இரண்டு டெஸ்ட் (தலா நான்கு நாள்) போட்டி கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி 'டிரா' ஆனது. இரண்டாவது போட்டி நேற்று லக்னோவில் துவங்கியது. 'டாஸ்' வென்ற இந்திய 'ஏ' அணி கேப்டன் துருவ் ஜுரல், பீல்டிங் தேர்வு செய்தார்.மெக்ஸ்வீனி அரைசதம்ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு கான்ஸ்டாஸ், கேம்ப்பெல் ஜோடி துவக்கம் கொடுத்தது. பிரசித் கிருஷ்ணா பந்தில் கேம்ப்பெல் (9) அவுட்டானார். கான்ஸ்டாஸ், 49 ரன் எடுத்த நிலையில், சிராஜ் 'வேகத்தில்' வீழ்ந்தார்.ஆலிவர் பீக் 29 ரன் எடுத்தார். கேப்டன் மெக்ஸ்வீனி அரைசதம் அடித்தார். இவர் 74 ரன்னில் அவுட்டானார்.மானவ் அபாரம்இதன் பின் இந்தியாவின் மானவ் சுதர், சுழலில் அடுத்தடுத்து விக்கெட்டுகள் சரிந்தன. முதலில் ஜோஷ் பிலிப் (39) சிக்கினார். வில் சதர்லாந்து (10), கோரே (2) என இருவரையும் விரைவில் வெளியேற்றினார் மானவ். இருப்பினும் ஜாக் எட்வர்ட்ஸ், அரைசதம் அடிக்க ஸ்கோர் 300 ரன்களை கடந்தது. எட்வர்ட்சை (88), ஹர்பிரீத் பிரார் திருப்பி அனுப்பினார்.முதல் நாள் முடிவில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 350/9 ரன் எடுத்திருந்தது. டாடு மர்பி (29), ஹென்றி (10) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் மானவ் 5, பிரார் 2 விக்கெட் சாய்த்தனர்.ஷ்ரேயஸ் விலகல்இந்திய 'ஏ' அணி கேப்டன் ஷ்ரேயஸ், தனிப்பட்ட காரணங்களுக்காக இரண்டாவது போட்டியில் பங்கேற்க வில்லை. இவருக்குப் பதில் துருவ் ஜுரல் கேப்டனாக களிமிறங்கினார்.* வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய 'ஏ' அணியில் லோகேஷ் ராகுல், முகமது சிராஜ் இடம் பெற்றனர்.