உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஷ்ரேயஸ் மீண்டும் கேப்டன்

ஷ்ரேயஸ் மீண்டும் கேப்டன்

புதுடில்லி: இந்திய அணி வீரர் ஷ்ரேயஸ் 30. ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கேப்டனாக நியமிக்கப்பட்டு இருந்தார். முதுகுவலி காரணமாக 2வது போட்டியில் இருந்து விலகினார். அடுத்த 6 மாதம் முதல் தர, டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்பதில்லை என முடிவு செய்துள்ளார். அடுத்து, ஆஸ்திரேலிய 'ஏ' அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளது. இப்போட்டிகள் கான்பூரில் வரும் செப்டம்பர் 30, அக். 3, 5ல் நடக்க உள்ளன. இதற்கான இந்திய 'ஏ' அணி கேப்டனாக ஷ்ரேயஸ், மீண்டும் நியமிக்கப்பட்டார். தவிர ரவி பிஷ்னோய், விக்கெட் கீப்பர் பிரப்சிம்ரன் சிங், ரியான் பராக், ஆயுஷ் படோனியும் அணியில் இடம் பெற்றனர். அணி விபரம் (முதல் போட்டி):ஷ்ரேயஸ், பிரப்சிம்ரன், ரியான் பராக், ஆயுஷ் படோனி, சுயான்ஷ், விப்ராஜ், நிஷாந்த், குர்ஜப்னீத் சிங், யுத்விர், பிஷ்னோய், அபிஷேக் போரல், பிரியான்ஷ் ஆர்யா, சிமர்ஜீத் சிங். தவிர, 2, 3வது போட்டிக்கான அணியில் ஆசிய கோப்பை தொடரில் பங்கேற்றுள்ள திலக் வர்மா, அபிஷேக் சர்மா, ஹர்ஷித் ராணா, அர்ஷ்தீப் சிங் சேர்க்கப்பட்டனர். ரஜத் தலைமைரஞ்சி கோப்பை சாம்பியன் விதர்பா, 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணிகள் இரானி கோப்பை போட்டியில் (அக். 1-5, நாக்பூர்) மோத உள்ளன. இதற்கான 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி கேப்டனாக ரஜத் படிதர் நியமிக்கப்பட்டார். தவிர, அபிமன்யு ஈஸ்வரன், ஆர்யன், ருதுராஜ், யாஷ் துல், ஷைக் ரஷீத், இஷான் கிஷான், தனுஷ், மானவ் சுதர், குர்னுார் பிரார், கலீல் அகமது, ஆகாஷ் தீப், கம்போஜ், சரண்ஷ் ஜெயின் இடம் பெற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை