உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சதம் விளாசினார் ஷ்ரேயஸ் * இந்திய ஏ அணி வெற்றி

சதம் விளாசினார் ஷ்ரேயஸ் * இந்திய ஏ அணி வெற்றி

கான்பூர்: இந்தியா வந்துள்ள ஆஸ்திரேலிய 'ஏ' அணி, இந்திய 'ஏ' அணிக்கு எதிராக மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டி மழையால் ரத்தானது. இரண்டாவது போட்டி நேற்று கான்பூரில் நடந்தது. 'டாஸ்' வென்ற ஆஸ்திரேலிய 'ஏ' அணி பீல்டிங் தேர்வு செய்தது. இந்திய 'ஏ' அணிக்கு பிரியான்ஷ் ஆர்யா, பிரப்சிம்ரன் சிங் ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. முதல் விக்கெட்டுக்கு 135 ரன் (20.3 ஓவர்) சேர்த்த போது, அரைசதம் அடித்த பிரப்சிம்ரன் (56) அவுட்டானார். ஆர்யா, 84 பந்தில் 101 ரன் (5X6, 11X4) எடுத்து அவுட்டானார். வேகமாக ரன் சேர்த்த ரியான் பராக், 42 பந்தில் 67 ரன் எடுத்தார். பவுண்டரி மழை பொழிந்த கேப்டன் ஷ்ரேயஸ், 83 பந்தில் 110 ரன் (4X6, 12X4) எடுத்து அவுட்டானார். ஆயுஷ் படோனி 27 பந்தில் 50 ரன் விளாசினார். இந்திய 'ஏ' அணி 50 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 413 ரன் குவித்தது. பின் களமிறங்கிய ஆஸ்திரேலிய 'ஏ' அணி 33.1 ஓவரில் 242 ரன்னில் ஆல் அவுட்டானது. இந்திய 'ஏ' அணி 172 ரன்னில் வெற்றி பெற்றது. நிஷாந்த் 4 விக்கெட் சாய்த்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை