உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பைனலில் தமிழக அணி

பைனலில் தமிழக அணி

சென்னை: புச்சி பாபு கிரிக்கெட் தொடர் பைனலுக்கு தமிழக அணி முன்னேறியது. தமிழக கிரிக்கெட் சங்கம் (டி.என்.சி.ஏ.,) சார்பில் புச்சி பாபு கிரிக்கெட் தொடர் நடக்கிறது. இதன் அரையிறுதியில் போட்டிகள் சென்னையில் நடந்தன. ஜம்மு அண்டு காஷ்மீர் அணிக்கு எதிரான அரையிறுதியில் டி.என்.சி.ஏ., லெவன் அணி, முதல் இன்னிங்சில் 567/9 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. பின் களமிறங்கிய ஜம்மு அண்டு காஷ்மீர் அணி, மூன்றாவது நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 212/4 ரன் எடுத்து, 355 ரன் பின்தங்கி இருந்தது. இன்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. முதல் இன்னிங்சை தொடர்ந்த ஜம்மு அண்டு காஷ்மீர் அணிக்கு தமிழகத்தின் வித்யுத், பெரும் தொல்லை கொடுத்தார். இவரது சுழலில் சிக்கிய ஜம்மு அண்டு காஷ்மீர் அணி, கூடுதலாக 18 ரன் எடுப்பதற்குள் மீதமுள்ள 6 விக்கெட்டுகளை இழக்க, 230 ரன்னில் ஆல் அவுட்டானது. தமிழக அணி 337 ரன் முன்னிலை பெற்று, வெற்றியை உறுதி செய்தது.இதையடுத்து இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாமல் போட்டியில் தோல்வியை ஏற்றுக் கொள்வதாக கூறி, விலகியது ஜம்மு அண்டு காஷ்மீர் அணி. தமிழகம் பைனலுக்கு முன்னேறியது. 7 விக்கெட் சாய்த்த வித்யுத் ஆட்டநாயகன் ஆனார். ஐதராபாத் அபாரம்மற்றொரு அரையிறுதியில் முதல் இன்னிங்சில் ஐதராபாத் 225, ஹரியானா 208 ரன் எடுத்தன. இரண்டாவது இன்னிங்சில் ஐதராபாத 254 ரன் எடுத்தது. 272 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய ஹரியானா அணி, மூன்றாவது நாள் முடிவில் 6/2 ரன் என திணறியது. இன்று கடைசி நாளில் ஹரியானா 181 ரன்னில் சுருண்டது. 90 ரன்னில் வெற்றி பெற்ற ஐதராபாத் பைனலுக்கு முன்னேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை