உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ஆஸி., கிளம்பியது இளம் இந்தியா

ஆஸி., கிளம்பியது இளம் இந்தியா

புதுடில்லி: முதல் தர தொடரில் பங்கேற்கும் இந்திய ஏ அணி, ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றது. ஆஸ்திரேலிய மண்ணில் இந்திய ஏ அணி, இரு போட்டி (தலா 4 நாள்) கொண்ட முதல் தர தொடரில் பங்கேற்கிறது. ஆஸ்திரேலிய ஏ அணிக்கு எதிரான இதன் முதல் போட்டி அக். 31-நவ. 3ல் மக்காயில் நடக்க உள்ளது. இரண்டாவது போட்டி மெல்போர்னில் நவ. 7-10ல் நடக்கும்.இதற்கான இந்திய ஏ அணி கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். அபிமன்யு ஈஸ்வரன் துணைக் கேப்டனாக உள்ளார். தமிழகத்தின் சாய் சுதர்சன், பாபா இந்திரஜித்தும் அணியில் இடம் பிடித்துள்ளனர். தவிர நிதிஷ் குமார், தேவ்தத் படிக்கல், ரிக்கி புய், இஷான் கிஷான், முகேஷ் குமார், கலீல் அகமது, நவ்தீப் சைனி உள்ளிட்டோரும் அணியில் உள்ளனர். இவர்கள் நேற்று ஆஸ்திரேலியா கிளம்பிச் சென்றனர். இந்தியாவுடன் மோதல்இதனிடையே ஆஸ்திரேலிய மண்ணில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, 5 போட்டி கொண்ட 'பார்டர்-கவாஸ்கர்' டிராபி தொடரில் (நவ. 22 முதல் 2025, ஜன. 7 வரை) பங்கேற்க உள்ளது. இதற்கு தயாராகும் வகையில் இந்திய அணி, இந்திய ஏ அணிக்கு எதிராக, மூன்று நாள் (நவ. 15-17) பயிற்சி போட்டியில் விளையாட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி