உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இரானி கோப்பை: சர்பராஸ், ஜுரல் விடுவிப்பு

இரானி கோப்பை: சர்பராஸ், ஜுரல் விடுவிப்பு

லக்னோ: ரெஸ்ட் ஆப் இந்தியா, மும்பை அணிகள் மோதும் இரானி கோப்பை போட்டி இன்று துவங்குகிறது. இந்திய கிரிக்கெட் போர்டு சார்பில் இரானி கோப்பை முதல் தர போட்டி நடத்தப்படுகிறது. இதுவரை நடந்த 61 போட்டிகளில் ரெஸ்ட் ஆப் இந்தியா 30 முறை கோப்பை வென்றது. மும்பை (14), கர்நாடகா (6) அடுத்து உள்ளன. இதன் 62 வது போட்டி இன்று லக்னோவில் (உ.பி.,) துவங்குகிறது. ரஞ்சி கோப்பை சாம்பியன் மும்பையுடன், 'ரெஸ்ட் ஆப் இந்தியா' அணி மோத உள்ளது. இதற்கான ரெஸ்ட் ஆப் இந்தியா அணி கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டார். அபிமன்யு ஈஸ்வரன் துணைக்கேப்டனாக செயல்பட உள்ளார். தவிர சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல், இஷான் கிஷான், முகேஷ் குமார் இதில் இடம் பெற்றுள்ளனர். மும்பை அணிக்கு ரகானே கேப்டனாக களமிறங்குகிறார். இதில் பங்கேற்கும் வகையில் இந்திய அணியில் இருந்து சர்பராஸ் கான், துருவ் ஜுரல் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை