3000 ரன்... 300 விக்கெட் * ஜடேஜா அசத்தல்
கான்பூர்: இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி உ.பி.,யில் உள்ள கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடக்கிறது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 233 ரன்னுக்கு ஆல் அவுட்டானாது. இந்தியாவின் பும்ரா 3, சிராஜ் 2, ஆகாஷ் 2, அஷ்வின் 2 விக்கெட் சாய்த்தனர். சுழலில் அசத்திய ஜடேஜா 1 விக்கெட் சாய்த்தார். இதையடுத்து டெஸ்டில் 3000 ரன், 300 விக்கெட்டுகள் எடுத்த 11 வது வீரர் ஆனார் ஜடேஜா. கபில்தேவ், அஷ்வினுக்கு பிறகு மூன்றாவது இந்தியர் ஆனார்.* இந்த இலக்கை அதிவேகமாக எட்டிய பவுலர்களில் இயான் போத்தமிற்கு (72 டெஸ்ட்) அடுத்த இடம் பெற்றார் ஜடேஜா (74). * டெஸ்டில் இலங்கையின் ஹெராத் (433), நியூசிலாந்தின் வெட்டோரிக்கு (362) பின், 300 விக்கெட்டுக்கும் மேல் சாய்த்த மூன்றாவது இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஜடேஜா.* கும்ளே (619), அஷ்வின் (526), கபில்தேவ் (434), ஹர்பஜன் (417), ஜாகிர் கான் (313), இஷாந்துக்கு (311) அடுத்து இந்த இலக்கை எட்டிய 7வது பவுலர் ஜடேஜா (300). இதன் விபரம்வீரர் போட்டி ரன் விக்.,வார்ன்(ஆஸி.,) 145 3154 708பிராட்(இங்கி.,) 167 3662 604அஷ்வின்(இந்தியா) 101 3422 522கபில்தேவ்(இந்தியா) 131 5248 434ஹாட்லீ(நியூசி.,) 86 3124 431ஷான் போலக்(தெ.ஆ.,) 108 3781 421போத்தம்(இங்கிலாந்து) 102 5200 383இம்ரான் கான்(பாக்.,) 88 3807 362வெட்டோரி(நியூசி.,) 113 4531 362வாஸ்(இலங்கை) 111 3089 355ஜடேஜா(இந்தியா) 74 3130 300