விடாது துரத்தும் மழை
கான்பூர்: கான்பூர் டெஸ்டின் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதும் மழையால் ரத்தானது.இந்தியா வந்துள்ள வங்கதேச அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்டில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி உ.பி.,யில் உள்ள கான்பூர், கிரீன்பார்க் மைதானத்தில் நடக்கிறது.மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் பாதிக்கப்பட்டது. வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 3 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்திருந்த போது, ஆட்டம் நிறுத்தப்பட்டது. 35 ஓவர்கள் மட்டும் வீசப்பட்ட நிலையில், முதல் நாள் ஆட்டம் ரத்தானது. மோமினுல் ஹக் (40), முஷ்பிகுர் (6) அவுட்டாகாமல் இருந்தனர்.மீண்டும் மழைநேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடக்க இருந்தது. ஆனால் தொடர்ந்து மழை பெய்ததால், ஒரு பந்துகூட வீசப்படாத நிலையில் இரண்டாவது நாள் ஆட்டம் முழுவதும் ரத்தானது.இன்று கான்பூரில், காலை 9:00 மணி வரை இடியுடன் கூடிய மழை பெய்யலாம். பின் 11:00 மணிக்கு மேல், மழை குறைந்து, வானம் மேகமூட்டமாக காணப்படும். இதனால் மூன்றாவது நாள் ஆட்டம் துவங்க தாமதம் ஏற்படும். ஒருவேளை இன்றும் போட்டி நடக்கவில்லை எனில், இரண்டாவது டெஸ்ட் 'டிரா' ஆக அதிக வாய்ப்புள்ளது.