மேலும் செய்திகள்
'டி-20' உலக கோப்பை தொடரில் வங்கதேச அணி நீக்கம்
25-Jan-2026
புதுடில்லி: இந்தியாவில் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்க (சி.ஏ.பி.ஐ.,) நிர்வாகம் தனியாக செயல்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இந்திய ஆண்கள் அணி 2012, 2017ல் 'டி-20' உலக கோப்பை, 2014, 2018ல் உலக கோப்பை (50 ஓவர்) என, பலமுறை சாதித்துள்ளது.கடந்த ஆண்டு இந்திய பெண்கள் அணியும் பார்வையற்றோர் உலக கோப்பை கைப்பற்றி அசத்தியது. இதையடுத்து, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில் பார்வையற்றோர் கிரிக்கெட் வளர்ச்சிக்கு உதவ முடிவு செய்யப்பட்டுள்ளது.இதன்படி, * ஆண்கள், பெண்கள் அணி, ஒவ்வொரு ஆண்டும் தலா இரு முறை அன்னிய மண்ணில் விளையாட உதவி தரப்படும்.* சொந்தமண்ணில் நடக்கும் இரு தரப்பு தொடருக்கு, தேவையான வசதிகள் செய்து தரப்படும். * பார்வையற்ற வீரர், வீராங்கனைகள் உள்ளூர், சர்வதேச போட்டிகளில் விளையாட, பி.சி.சி.ஐ.,யின் உலகத் தரம் வாய்ந்த மைதான வசதிகள் வழங்கப்படும்.பி.சி.சி.ஐ., தலைவர் மிதுன் மன்ஹாஸ் கூறுகையில்,'' இந்திய பார்வையற்ற வீரர், வீராங்கனைகளின் சாதனைகள், கிரிக்கெட் உலகை பெருமைப்படச் செய்துள்ளன. இவர்களுக்கு சிறந்த உட்கட்டமைப்பு, போட்டிகளில் பங்கேற்க போதிய வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்பது எங்கள் நோக்கமாக உள்ளது. இதனால், பலரும் நம்பிக்கையுடன் கிரிக்கெட் விளையாடத் துவங்கலாம்,'' என்றார்.
25-Jan-2026