உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலையா...

முன்னாள் கிரிக்கெட் வீரர் தற்கொலையா...

பெங்களூரு: இந்திய அணி முன்னாள் வீரர் டேவிட் ஜான்சன், நான்காவது மாடியில் இருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார். இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் டேவிட் ஜான்சன் 52. கர்நாடகாவின் ஹாசன் அரசிகெரேவை சேர்ந்தவர். கடந்த 1996ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டில்லி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக டர்பன் என 2 டெஸ்டில் சச்சின், டிராவிட், கங்குலி, ஸ்ரீநாத், வெங்கடேஷ் பிரசாத், தோடா கணேஷ் என முன்னாள் வீரர்களுடன் விளையாடினார். மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். பெங்களூருவில் கனகஸ்ரீ லே-அவுட்டில் உள்ள எஸ்.எல்.வி., பேரடைஸ் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார். நேற்று காலையில் நான்காவது மாடியில் இருந்து, கீழே விழுந்து மரணம் அடைந்தார். இதற்கான காரணம் தெரியவில்லை. சில நாட்களாக, உடல்நிலை பாதிப்பால் அவதிப்பட்டார். இதனால் விரக்தி அடைந்து, தற்கொலை செய்து கொண்டாரா என போலீசார் விசாரிக்கின்றனர்.கும்ளே வெளியிட்ட செய்தியில்,' எனது சக வீரர் மறைவு அதிர்ச்சியாகவும், சோகமாகவும் உள்ளது,'' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ