உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கோலிக்கு சலுகை ஏன்

கோலிக்கு சலுகை ஏன்

லண்டன்: இந்திய கிரிக்கெட் அணி, செப். 9-28ல் ஆசிய கோப்பை 'டி-20' தொடரில் பங்கேற்க உள்ளது. அடுத்து சொந்த மண்ணில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் (அக்.,-நவ.,) களமிறங்குகிறது. சமீபத்திய இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர்கள் உட்பட பலர் காயத்தால் அவதிப்பட்டனர். இதனால் ஆசிய கோப்பை தொடருக்குப் பின் அனைத்து வீரர்களுக்கும் 'யோ யோ', 'பிரான்கோ' என, 'பிட்னஸ்' சோதனையில் பங்கேற்க கேட்டுக் கொள்ளப்பட்டனர். ரோகித் சர்மா, பும்ரா, சிராஜ், சுப்மன் கில் உள்ளிட்ட வீரர்கள் கடந்த ஆக. 29-31ல் பெங்களூரு, தேசிய கிரிக்கெட் அகாடமிக்கு வந்து, 'பிட்னஸ்' நிரூபித்தனர். 'சீனியர்' வீரர் கோலி 36, லண்டனில் குடும்பத்துடன் தங்கியுள்ளார். டெஸ்ட், 'டி-20'ல் ஓய்வு பெற்ற இவர், ஆஸ்திரேலிய ஒருநாள் தொடரில் பங்கேற்க உள்ளார். தற்போது, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) அனுமதியுடன், அங்கிருந்தபடி 'பிட்னஸ்' சோதனை முடித்து, அறிக்கை அனுப்பியுள்ளார்.இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட், 'கண்டிசனிங்' டிரைனர்ஸ், வீரர்கள் குறித்த அறிக்கையை இந்திய கிரிக்கெட் போர்டுக்கு (பி.சி.சி.ஐ.,) அனுப்பினர். இதில் கோலியின் அறிக்கையும் உள்ளது. பி.சி.சி.ஐ., தரப்பில் ஒருவர் கூறுகையில்,'' வெளிநாட்டில் இருந்து சோதனையில் ஈடுபட கோலி, முன்னதாக அனுமதி பெற்றிருப்பார்,'' என்றார். எனினும் கோலிக்கு மட்டும் சலுகை தந்த பி.சி.சி.ஐ., செயலுக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. எதிர்காலத்தில், அன்னிய மண்ணில் ஓய்வில் இருக்கும் வீரர்கள் இதுபோல, அங்கிருந்தபடி 'பிட்னஸ்' நிரூபிக்க அனுமதிக்கப்படுவரா என விமர்சனம் எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை