உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரோகித், கோலி எதிர்காலம் * கபில்தேவ் கணிப்பு

ரோகித், கோலி எதிர்காலம் * கபில்தேவ் கணிப்பு

புதுடில்லி: இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா 37, சீனியர் வீரர் கோலி 35. சமீபத்தில் 'டி-20' உலக கோப்பை வெல்ல கைகொடுத்தனர். இருவரும் அடுத்த ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி (பிப். 19-மார்ச் 9), உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் (ஜூன் 11-15) வரை அணியில் நீடிக்க உள்ளனர்.தவிர 2027 உலக கோப்பை தொடரிலும் பங்கேற்கும் திட்டம் உள்ளது. ஆனால் இருவரும் சமீபத்திய போட்டிகளில் ரன் சேர்க்க திணறுகின்றனர். 2021க்குப் பின் ரோகித் சர்மா (15 டெஸ்டில் சராசரி 44.00 ரன்), கோலி (15ல் 30.00 ரன்) என இருவரும் தொடர்ந்து தடுமாறி வருகின்றனர். சென்னையில் நடந்த வங்கதேசத்திற்கு எதிரான முதல் டெஸ்டில் ரோகித் 6, 5 ரன், கோலி 6, 17 ரன் மட்டும் தான் எடுத்தனர்.இதுகுறித்து இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் 65, கூறியது:கிரிக்கெட்டில் 26 முதல் 34 வயது வரையில் தான் சிறப்பாக விளையாட முடியும். இதற்கும் மேல் என்றால், அவர்களின் 'பிட்னஸ்' பொறுத்து சர்வதேச அரங்கில் நீடித்து நிலைக்கலாம். மற்றபடி சம்பந்தப்பட்ட வீரரின் ஓய்வு, எதிர்காலத்தை தீர்மானிப்பது என்பது, அவரவரர் தனிப்பட்ட முடிவு. ரவி சாஸ்திரி விரைவில் (32 வயது) ஓய்வு பெற்றார். சச்சின் (40 வயது) நீண்டகாலம் கிரிக்கெட் விளையாடினார். என்னைப் பொறுத்தவரையில் சர்வதேச அரங்கில் நீடிக்கும் வரை உடற்தகுதியுடன் இருக்க வேண்டும். தொடர்ந்து விளையாடிக் கொண்டே இருக்க வேண்டும் என்பது தான் எனது எண்ணம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Minimole P C
செப் 24, 2024 07:39

Rohit and Koli may retained in the final elevan, as their inclusion will boost the morale of the team besides, the Rohit cataincy brings best out from the rest of the team members. At present no need to change, because of team Indias hectic schedule.


முக்கிய வீடியோ