உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / கைகொடுத்த காம்பிர் அட்வைஸ் * மகிழ்ச்சியில் வருண் சக்ரவர்த்தி

கைகொடுத்த காம்பிர் அட்வைஸ் * மகிழ்ச்சியில் வருண் சக்ரவர்த்தி

கெபேஹா: ''தொடர்ந்து உள்ளூர் போட்டிகளில் பங்கேற்றது, பயிற்சியாளர் காம்பிர் 'அட்வைஸ்' தான், இழந்த 'பார்மை' மீட்க உதவியது,'' என வருண் சக்ரவர்த்தி தெரிவித்துள்ளார். இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்ரவர்த்தி 33. தமிழகத்தை சேர்ந்த இவர், மூன்று ஆண்டுக்குப் பின், வங்கதேச 'டி-20' தொடரில் சேர்க்கப்பட்டார். அடுத்து, தென் ஆப்ரிக்க மண்ணில் நடக்கும் நான்கு போட்டிகள் கொண்ட 'டி-20' தொடருக்கான அணியில் இடம் பிடித்தார்.முதல் போட்டியில் 3 விக்கெட் சாய்த்த வருண் சக்ரவர்த்தி, இரண்டாவது போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தினார். சர்வதேச 'டி-20'ல் தனது சிறந்த பந்துவீச்சை பதிவு செய்தார். இதுகுறித்து அவர் கூறியது:இந்திய அணியில் இடம் பெறாமல் இருந்த கடந்த மூன்று ஆண்டுகள், சற்று கடினமாக இருந்தன. அதேநேரம் டி.என்.பி.எல்., உட்பட பல்வேறு உள்ளூர் தொடர்களில், தொடர்ந்து விளையாடினேன். எனது பவுலிங் திறமையை வளர்க்க இப்போட்டிகள் பெரிதும் உதவியாக இருந்தன. காம்பிர் 'அட்வைஸ்'தவிர பயிற்சியாளர் காம்பிர் கொடுத்த 'அட்வைஸ்', மிகவும் உதவியாக இருந்தது. வங்கதேச தொடரில் இவருடன் இணைந்து செயல்பட்டேன். அப்போது உற்சாகம் தரும் வகையில் பேசினார். 30 அல்லது 40 ரன் கொடுப்பது குறித்து கவலைப்பட வேண்டாம். ஆனால் விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்க வேண்டும். உன்னுடைய வேலை அது தான்,' என்றார். இது தான் தற்போது சர்வதேச அரங்கில் சிறப்பாக செயல்பட கைகொடுக்கிறது. தென் ஆப்ரிக்க அணி சிறந்த அணி மட்டுமல்ல, வலுவான பேட்டிங் வரிசை கொண்டது. இந்த அணிக்கு எதிராக சிறப்பாக செயல்படுவது, அதிக தன்னம்பிக்கை தருகிறது. அடுத்து வரும் போட்டிகளிலும் இதேபோல செயல்படுவேன் என நம்புகிறேன்.இவ்வாறு வருண் சக்ரவர்த்தி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ