உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / மீண்டது இந்திய பெண்கள் அணி

மீண்டது இந்திய பெண்கள் அணி

பிரிஸ்பேன்: ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய பெண்கள் 'ஏ' அணி, ஆஸ்திரேலியா 'ஏ' அணியுடன் அதிகாரப்பூர்வமற்ற 4 நாள் கொண்ட டெஸ்டில் பங்கேற்கிறது. பிரிஸ்பேனில் நடக்கும் இப்போட்டியின் முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இந்திய பெண்கள் 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 93/5 ரன் எடுத்திருந்தது. ராகவி (26), கேப்டன் ராதா (8) அவுட்டாகாமல் இருந்தனர்.ராகவி அபாரம்நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. ராதா 33 ரன் எடுக்க, ராகவி அரைசதம் கடந்தார். இவர் 93 ரன் எடுத்த போது, மைத்லன் பந்தில் போல்டானார். மின்னு 28, திதாஸ் 23 ரன் எடுத்தனர். பின் வரிசையில் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷிதா (51), அரைசதம் எட்டினார். இந்திய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 299 ரன்னில் ஆல் அவுட்டானது. ஆஸ்திரேலிய 'ஏ' அணிக்கு ராச்செல் (21), கேப்டன் தஹ்லியா (49) ஜோடி துவக்கம் தந்தது. மேடி (12), அனிகா (15) நிலைக்கவில்லை. இரண்டாவது நாள் முடிவில் ஆஸ்திரேலிய 'ஏ' அணி முதல் இன்னிங்சில் 158/5 ரன் எடுத்து, 141 ரன் பின்தங்கி இருந்தது. இந்தியா சார்பில் சைமா, ராதா தலா 2 விக்கெட் சாய்த்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை