உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பாக்., மீண்டும் தோல்வி * நியூசிலாந்து அணி அபாரம்

பாக்., மீண்டும் தோல்வி * நியூசிலாந்து அணி அபாரம்

டுனிடின்: நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது 'டி-20' போட்டியில் பாகிஸ்தான் அணி, 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.நியூசிலாந்து சென்றுள்ள பாகிஸ்தான் அணி, ஐந்து போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற நியூசிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது.இரண்டாவது போட்டி டுனிடினிடில் நடந்தது. மழை காரணமாக போட்டி தலா 15 ஓவர்கள் கொண்டதாக நடந்தது. 'டாஸ்' வென்ற நியூசிலாந்து கேப்டன் பிரேஸ்வெல் 'பீல்டிங்' தேர்வு செய்தார்.சல்மான் ஆறுதல்பாகிஸ்தான் அணிக்கு முகமது ஹாரிஸ், ஹசன் நவாஸ் ஜோடி துவக்கம் தந்தது. முதல் போட்டி போல மீண்டும் 'டக்' அவுட்டானார் ஹசன். ஹாரிஸ் (11), இர்பான் கான் (11), குஷ்தில் ஷா (2) ஏமாற்றினர். கேப்டன் சல்மான் 28 பந்தில் 46 ரன் எடுத்து ஆறுதல் தந்தார். ஷதாப் கான் (26), ஷாகின் ஷா அப்ரிதி (22) சற்று உதவ, 15 ஓவரில் பாகிஸ்தான் அணி 135/9 ரன் எடுத்தது. நியூசிலாந்து சார்பில் ஜேக்கப் டபி, சியர்ஸ், நீஷம், இஷ் சோதி தலா 2 விக்கெட் கைப்பற்றினர்.செய்பெர்ட் அபாரம்அடுத்து 90 பந்தில் 136 ரன் என்ற இலக்குடன் களமிறங்கியது நியூசிலாந்து. டிம் செய்பெர்ட் (45 ரன், 22 பந்து), பின் ஆலன் (38 ரன், 16 பந்து) ஜோடி சூப்பர் துவக்கம் கொடுக்க, 60 பந்தில் 70 ரன் என வெற்றி எளிதானது.டேரில் மிட்செல் (14), மிட்செல் ஹே (21) தங்கள் பங்கிற்கு ரன் சேர்க்க, நியூசிலாந்து அணி 13.1 ஓவரில் 137/5 ரன் எடுத்து வெற்றி பெற்றது. தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது.அபராதம் கிறைஸ்ட்சர்ச்சில் நடந்த முதல் போட்டியில் பாகிஸ்தான் வீரர் குஷ்தில் ஷா, நியூசிலாந்தின் ஜாக் போல்க்ஸ் தோள் மீது வேண்டுமென்றே இடித்தார். தவறை ஒப்புகொண்ட இவருக்கு போட்டி சம்பளத்தில் 50 சதவீதம் அபராதம் விதிக்கப்பட்டது. 3 தகுதியிழப்பு புள்ளி வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ