உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரஞ்சி கோப்பை: தமிழகம் டிரா

ரஞ்சி கோப்பை: தமிழகம் டிரா

பெங்களூரு: தமிழகம், நாகலாந்து அணிகள் மோதிய ரஞ்சி கோப்பை லீக் போட்டி 'டிரா' ஆனது. பெங்களூருவில் நடந்த ரஞ்சி கோப்பை கிரிக்கெட் 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், நாகலாந்து அணிகள் மோதின. தமிழக அணி முதல் இன்னிங்சில் 512/3 ரன் எடுத்து 'டிக்ளேர்' செய்தது. மழையால் பாதிக்கப்பட்ட மூன்றாவது நாள் முடிவில் நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 365/5 ரன் எடுத்திருந்தது. நிஸ்கல் (161), லெம்டுர் (115) அவுட்டாகாமல் இருந்தனர். நேற்று நான்காவது, கடைசி நாள் ஆட்டம் நடந்தது. ஆறாவது விக்கெட்டுக்கு 230 ரன் சேர்த்த போது, அம்ப்ரிஸ் பந்தில் நிஸ்சால் (175) அவுட்டானார். ரஹ்மான் (13) நிலைக்கவில்லை. கடைசியில் லெம்டுர் (146) அவுட்டாக, நாகலாந்து அணி முதல் இன்னிங்சில் 446 ரன்னில் ஆல் அவுட்டானது. இரு அணிகளும் இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடாத நிலையில் போட்டி 'டிரா' ஆனதாக அறிவிக்கப்பட்டது. முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றதன் அடிப்படையில் தமிழக அணிக்கு 3 புள்ளி கிடைத்தது. நாகலாந்துக்கு 1 புள்ளி கிடைத்தது. ஷமி அபாரம்கோல்கட்டாவில் (ஈடன் கார்டன்) நடந்த 'சி' பிரிவு லீக் போட்டியில் பெங்கால் அணி (279, 214/8), குஜராத்தை (167, 185) 141 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. பெங்கால் சார்பில் ஷாபாஸ் அகமது 9 (6+3), முகமது ஷமி 8 விக்கெட் (3+5) சாய்த்தனர். ரஞ்சி கோப்பை தொடரின் முதல் இரு போட்டியில் ஷமி, இதுவரை 15 விக்கெட் சாய்த்துள்ளார்.'டி' பிரிவில் நடந்த (மும்பை), மும்பை (416), சத்தீஷ்கர் (217, 201/3) அணிகள் மோதிய லீக் போட்டி 'டிரா' ஆனது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி