மேலும் செய்திகள்
ரஞ்சி: தமிழக அணி ஏமாற்றம்
08-Nov-2025
விசாகப்பட்டனம்: ரஞ்சி கோப்பை தொடரில் இரண்டாவது தோல்வியை பதிவு செய்தது தமிழகம். ஆந்திராவிடம் 4 விக்கெட்டில் வீழ்ந்தது. இந்தியாவில் ரஞ்சி கோப்பை தொடரின் 91வது சீசன் நடக்கிறது. விசாகப்பட்டனத்தில் நடந்த 'ஏ' பிரிவு லீக் போட்டியில் தமிழகம், ஆந்திர அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் தமிழகம் 182, ஆந்திரா 177 ரன் எடுத்தன. 2வது நாள் முடிவில் தமிழக அணி 2வது இன்னிங்சில் தமிழகம் 102/3 ரன் எடுத்திருந்தது.நேற்று மூன்றாவது நாள் ஆட்டம் நடந்தது. தமிழக அணிக்கு சித்தார்த் (33), சோனு (28) தவிர மற்றவர்கள் கைவிட, தமிழக அணி 195 ரன்னில் ஆல் அவுட்டானது. இரண்டாவது இன்னிங்சில் 201 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கியது ஆந்திரா. பரத் (5), அபிஷேக் ஜோடி துவக்கம் தந்தது. அபிஷேக் (70), கரண் (51) வேகமாக ரன் சேர்க்க, ஆந்திரா 158/2 என வெற்றியை நெருங்கியது. அடுத்து 4 ரன் எடுப்பதற்குள் 4 விக்கெட்டுகளை இழந்த ஆந்திரா 162/6 என திணறியது. அடுத்து வந்த அஷ்வின் (21), ராஜு (20) அவுட்டாகாமல் அணியை கரை சேர்த்தனர். ஆந்திரா அணி 2வது இன்னிங்சில் 201/6 ரன் எடுத்து வென்றது. தமிழகம் சார்பில் சாய் கிஷோர், 3 விக்கெட் சாய்த்தார்.இத்தொடரில் 4 போட்டியில் தமிழகம் அடைந்த 2வது தோல்வி (2 'டிரா') இது. புள்ளிப்பட்டியலில் 6வது இடத்திலுள்ள தமிழகம் (4), மீதமுள்ள 3 போட்டியில் வென்றாலும், காலிறுதி வாய்ப்பு சந்தேகம் தான்.மும்பை வெற்றிமும்பையில் நடந்த 'டி' பிரிவு லீக் போட்டியில் மும்பை அணி (446), இமாச்சல பிரதேசத்தை (187, 139), இன்னிங்ஸ், 120 ரன்னில் வீழ்த்தியது. சூரத்தில் நடந்த 'பிளேட் குரூப்' போட்டியில் மேகாலயா அணி (628/6), அருணாச்சல பிரதேசத்தை (73, 109), இன்னிங்ஸ், 446 ரன்னில் சாய்த்தது. ராய்ப்பூரில் நடந்த ('டி') போட்டியில் புதுச்சேரி அணி (205, 175), சத்தீஷ்கர் அணியிடம் (377, 4/0) 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
08-Nov-2025