தீப்தி சர்மா முன்னேற்றம் * ஐ.சி.சி., தரவரிசையில்
துபாய்: ஐ.சி.சி., ஒருநாள் போட்டி பவுலர் தரவரிசையில் இந்தியாவின் தீப்தி சர்மா, 3வது இடத்துக்கு முன்னேறினார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில், ஒருநாள் போட்டியில் சிறந்து விளங்கும் வீராங்கனைகளுக்கான தரவரிசை பட்டியல் வெளியானது. உலக கோப்பை தொடரில் சிறப்பாக செயல்படும் இந்தியாவின் தீப்தி சர்மா (669 புள்ளி), பவுலர் வரிசையில் மூன்று இடம் முன்னேறி, 'நம்பர்-3' ஆக உள்ளார். முதல் இரு இடத்தில் இங்கிலாந்தின் சோபி (778), ஆஸ்திரேலியாவின் ஆஷ்லே கார்டுனர் (686) உள்ளனர். பேட்டர் தரவரிசையில் இந்தியாவின் ஸ்மிருதி மந்தனா, 809 புள்ளிகளுடன் முதலிடத்தில் நீடிக்கிறார். இங்கிலாந்தின் நாட் சிவர் பிரன்ட் (726), ஆஸ்திரேலியாவின் அலிசா (718) அடுத்த இரு இடத்தில் உள்ளனர். இந்தியாவின் ஹர்மன்பிரீத் கவுர் (619) மூன்று இடம் முன்னேறி, 15 வது இடத்தில் உள்ளார். தீப்தி சர்மா (587) 5 இடம் முந்தி, 20வது இடம் பிடித்தார்.