சூப்பர் ஓவரில் * இந்தியா ஏ தோல்வி
தோஹா: கத்தார் தலைநகர் தோஹாவில், இளம் வீரர்களுக்கான 'ரைசிங் ஸ்டார்' ஆசிய கோப்பை ('டி-20') 7வது சீசன் நடக்கிறது. இதன் முதல் அரையிறுதியில் இந்தியா 'ஏ', வங்கதேசம் 'ஏ' அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய 'ஏ' பீல்டிங் செய்தது. வங்கதேச 'ஏ' அணிக்கு ஹபிபுர் (65) கைகொடுத்தார். கடைசி 2 ஓவரில் (28, 22) 50 ரன் விளாசியது வங்கதேசம் 'ஏ'. 20 ஓவரில் 194/6 ரன் குவித்தது. இந்திய 'ஏ' அணிக்கு வைபவ் (38), பிரியான்ஷ் (44), கேப்டன் ஜிதேஷ் சர்மா (33) உதவினர். கடைசி ஓவரில் வெற்றிக்கு 16 ரன் தேவை என்ற நிலையில், 15 ரன் மட்டும் எடுக்கப்பட்டன. இந்திய 'ஏ' அணி 20 ஓவரில் 194/6 ரன் எடுக்க, போட்டி 'டை' ஆனது.'டக்' அதிர்ச்சிவெற்றியாளரை முடிவு செய்ய 'சூப்பர் ஓவர்' நடந்தது. முதலில் களமிறங்கிய இந்திய 'ஏ' அணியின் ஜிதேஷ் (0), ராமன்தீப் (0) என இருவரும் முதல் இரு பந்தில், ரன் எதுவும் எடுக்காமல் அவுட்டாகினர். 1 ரன் எடுத்தால் வெற்றி என களமிறங்கிய வங்கதேச 'ஏ' அணியின் யாசிர், முதல் பந்தில் 'டக்' அவுட்டானார். அடுத்த பந்தை சுயாஷ் சர்மா, 'வைடாக' வீசினார். இதையடுத்து வெற்றி பெற்ற வங்கதேச 'ஏ' அணி, பைனலுக்கு முன்னேறியது. இந்தியா 'ஏ' வெளியேறியது.