உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / தென் ஆப்ரிக்கா திரில் வெற்றி * கடைசி ஓவரில் வீழ்ந்தது இங்கிலாந்து

தென் ஆப்ரிக்கா திரில் வெற்றி * கடைசி ஓவரில் வீழ்ந்தது இங்கிலாந்து

லார்ட்ஸ்: இங்கிலாந்துக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் தென் ஆப்ரிக்க அணி, 5 ரன் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது. இங்கிலாந்து சென்றுள்ள தென் ஆப்ரிக்க அணி, மூன்று போட்டி கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் வென்ற தென் ஆப்ரிக்கா 1-0 என தொடரில் முன்னிலை பெற்றது. இரண்டாவது போட்டி லார்ட்சில் நடந்தது. மழை காரணமாக சுமார் 2 மணி நேரம் தாமதமாக போட்டி துவங்கியது. 'டாஸ்' வென்ற இங்கிலாந்து அணி ஹாரி புரூக், பீல்டிங் தேர்வு செய்தார். நல்ல துவக்கம்தென் ஆப்ரிக்க அணிக்கு மார்க்ரம் (49), ரிக்கிள்டன் (35) ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. கேப்டன் பவுமா (4) ஏமாற்ற, மாத்யூ பிரீட்ஸ்கே (85), ஸ்டப்ஸ் (58) அரைசதம் விளாசினர். பிரவிஸ் 20 பந்தில் 42 ரன் எடுத்தார். தென் ஆப்ரிக்க அணி 50 ஓவரில் 330/8 ரன் குவித்தது. கார்பின் (32) அவுட்டாகாமல் இருந்தார். இங்கிலாந்தின் ஆர்ச்சர் 4, ரஷித் 2 விக்கெட் சாய்த்தனர்.பட்லர் ஆறுதல்கடின இலக்கைத் துரத்திய தென் ஆப்ரிக்க அணிக்கு ஸ்மித் (0), டக்கெட் (14) ஜோடி துவக்கத்தில் ஏமாற்றியது. ஜோ ரூட் (61), பெத்தெல் (58) அரைசதம் அடித்தனர். ஹாரி புரூக் (33), ஜாக்ஸ் (39) சற்று உதவ, பட்லர் 61 ரன் எடுத்தார். இங்கிலாந்து வெற்றிக்கு கடைசி ஓவரில் 16 ரன் தேவைப்பட்டன.முத்துசாமி பந்தை சுழற்றினார். ஆர்ச்சர் 2 பவுண்டரி அடித்த போதும், 10 ரன் மட்டுமே எடுக்கப்பட்டன. இங்கிலாந்து அணி 50 ஓவரில் 325/9 ரன் எடுத்து தோல்வியடைந்தது. தென் ஆப்ரிக்கா 2-0 என தொடரை வென்றது.21 தோல்விகடந்த 2023 உலக கோப்பை தொடருக்குப் பின் இங்கிலாந்து அணி பங்கேற்ற 31 ஒருநாள் போட்டியில் 21ல் தோற்றது. 10ல் தான் வென்றது. 2025ல் மட்டும் மோதிய 11 போட்டியில் 3ல் தான் வென்றது. 8ல் தோற்றது. பிரீட்ஸ்கே சாதனைதென் ஆப்ரிக்காவின் மாத்யூ பிரீட்ஸ்கே 26, கடந்த பிப். 10ல் நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் போட்டியில் (லாகூர்) அறிமுகம் ஆனார். இதில் 150 ரன் எடுத்தார். அடுத்த 3 போட்டியில் 83, 57, 88 ரன் எடுத்த இவர் நேற்று, 85 ரன் விளாசினார். இதையடுத்து ஒருநாள் அரங்கில் தனது முதல் 5 போட்டியிலும் 50க்கும் மேல் ரன் எடுத்த முதல் வீரர் என புதிய சாதனை படைத்தார்.* தவிர முதல் 5 போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர் ஆனார் பிரீட்ஸ்கே (463). அடுத்த இடத்தில் டாம் கூப்பர் (374, நெதர்லாந்து) உள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ