இந்திய அணி இரண்டாவது வெற்றி * அரைசதம் விளாசினார் ஷைபாலி
விசாகப்பட்டினம்: ஷைபாலி அரைசதம் கைகொடுக்க, இரண்டாவது 'டி-20' போட்டியில் இந்திய அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கையை வீழ்த்தியது. இந்தியா வந்துள்ள இலங்கை பெண்கள் அணி, ஐந்து போட்டிகள் கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. முதல் போட்டியில் இந்தியா வென்றது. இரண்டாவது போட்டி நேற்று விசாகப்பட்டினத்தில் மீண்டும் நடந்தது. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஹர்மன்பிரீத் கவுர், 'பீல்டிங்' தேர்வு செய்தார். மோசமான துவக்கம்இலங்கை அணிக்கு கேப்டன் சமாரி, விஷ்மி (1) ஜோடி மோசமான துவக்கம் கொடுத்தது. சமாரி, ஹாசினி இணைந்தனர். கிராந்தி வீசிய 3 வது ஓவரில் சமாரி, 4, 6 என விளாசினார். இந்நிலையில் பந்தை சுழற்றிய ஸ்னே, சமாரியை (31 ரன், 24 பந்து) வெளியேற்றினார். இலங்கை அணி 10 ஓவரில் 66/2 ரன் எடுத்தது. மறுபக்கம் தடுமாறிய ஹாசினி (28 பந்து, 22 ரன்), ஸ்ரீசரணி பந்தில் வீழ்ந்தார். முதல் விக்கெட்ஹர்ஷித்தா (33) ரன் அவுட்டானார். வைஷ்ணவி வீசிய 18 வது ஓவரின் முதல் பந்தில் நிலாக்சிகா (2) அவுட்டானார். சர்வதேச 'டி-20'ல் இது, இவரது முதல் விக்கெட் ஆக அமைந்தது. மீண்டும் அசத்திய வைஷ்ணவி, ஷாஷினியை (0) பெவிலியனுக்கு அனுப்பினார். காவ்யா (1), கவுஷினி (11) கடைசி ஓவரில் ரன் அவுட்டாகினர்.இலங்கை அணி 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 128 ரன் மட்டும் எடுத்தது. இந்தியா சார்பில் வைஷ்ணவி, ஸ்ரீசரணி தலா 2 விக்கெட் சாய்த்தனர்.ஷைபாலி அரைசதம்அடுத்து களமிறங்கிய இந்திய அணிக்கு ஸ்மிருதி மந்தனா, ஷைபாலி ஜோடி துவக்கம் கொடுத்தது. ஸ்மிருதி 14 ரன்னில் அவுட்டாக, ஜெமிமா 26 ரன் எடுத்து திரும்பினார். ஷைபாலி அரைசதம் விளாசினார். ஹர்மன்பிரீத் கவுர் (10) அவுட்டான போதும், இந்திய பெண்கள் அணி 11.5 ஓவரில் 129/3 ரன் எடுத்து, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஷைபாலி (69 ரன், 34 பந்து), ரிச்சா (1) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா, தொடரில் 2-0 என முன்னிலை பெற்றது. மூன்றாவது போட்டி டிச. 26ல் திருவனந்தபுரத்தில் நடக்க உள்ளது.2020க்குப் பின்...இந்திய அணி சுழற்பந்து வீச்சாளர் தீப்தி சர்மா. கடந்த 2020, ஜன. 31 முதல் இந்திய அணி பங்கேற்ற அனைத்து 'டி-20' போட்டியிலும் இடம் பிடித்தார். 5 ஆண்டுக்குப் பின் முதன் முறையாக நேற்று உடல் நலக்குறைவு காரணமாக பங்கேற்கவில்லை. இவருக்குப் பதில் ஸ்னே ராணா சேர்க்கப்பட்டார்.