உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / பூனைக்கு முடிவெட்ட ரூ. 1.83 லட்சம் * வாசிம் அக்ரம் ருசிகரம்

பூனைக்கு முடிவெட்ட ரூ. 1.83 லட்சம் * வாசிம் அக்ரம் ருசிகரம்

பெர்த்: பூனைக்கு முடிவெட்ட, ரூ. 1.83 லட்சம் செலவு செய்தததாக வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் அணி முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் வாசிம் அக்ரம் 58. சமீபத்தில் நடந்த ஆஸ்திரேலியா-பாகிஸ்தான் ஒருநாள் தொடரில் வர்ணனையாளராக பணியாற்றினார். அப்போது அவர் கூறுகையில்,''ஆஸ்திரேலியாவில் எனது பூனைக்கு முடிவெட்ட ஒரு கடைக்கு சென்றேன். முதலில் மயக்க மருந்து கொடுத்தனர். பிறகு உணவு கொடுத்தனர். இதற்காக பாகிஸ்தான் பணம் ரூ. 1.83 லட்சம் (இந்திய மதிப்பில் ரூ. 55,000) செலுத்த வேண்டியது இருந்தது. எனக்கு முடிவெட்டுவதற்கு கூட இவ்வளவு செலவு செய்ததில்லை. இந்தப் பணத்தில் பாகிஸ்தானில் 200 பூனைகளை வாங்கி வளர்த்து விடலாம்,'' என்றார்.இதைக் கேட்ட சக வர்ணனையாளர்கள் நம்ப முடியாமல் வியந்தனர். உடனே பணம் செலுத்தியற்கான ரசீதை காண்பித்தார். அதில்,' பூனையின் மருத்துவ பரிசோதனை (ரூ. 20,000), மயக்க மருந்து செலவு (ரூ. 56,000), இருதய துடிப்பு சோதனை (ரூ. 46,000) என, ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக செலவு குறிப்பிடப்பட்டு இருந்தது. முடி வெட்டுவதற்கு ரூ. 7,300 மட்டும் தான் செலவு என இருந்தது. இதைப் பார்த்து சிரித்து மகிழ்ந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Venkateswaran Rajaram
நவ 13, 2024 09:30

இவன் நாட்டு மக்களை பிச்சைக்காரனாக்கிவிட்டு ஊதாரித்தனமாக செலவு செய்வதை பெருமையாக சொல்லிகொள்கிறான்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை