உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / 167 ரன்னில் சுருண்டது வெ.இண்டீஸ் * 5 விக்கெட் சாய்த்தார் டபி

167 ரன்னில் சுருண்டது வெ.இண்டீஸ் * 5 விக்கெட் சாய்த்தார் டபி

கிறைஸ்ட்சர்ச்: கிறைஸ்ட்சர்ச் டெஸ்ட் முதல் இன்னிங்சில் 167 ரன்னில் சுருண்டது வெஸ்ட் இண்டீஸ். நியூசிலாந்து சென்றுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி, மூன்று போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், கிறைஸ்ட்சர்ச்சில் நடக்கிறது. முதல் நாள் முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 231/9 ரன் எடுத்திருந்தது.நேற்று இரண்டாவது நாள் ஆட்டம் நடந்தது. முந்தைய நாள் ஸ்கோருடன் பால்க்ஸ் (4) அவுட்டானார். நியூசிலாந்து அணி முதல் இன்னிங்சில் 231 ரன்னில் ஆல் அவுட்டானது. டபி (4) அவுட்டாகாமல் இருந்தார். ஹோப் ஆறுதல்வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு கேம்ப்பெல் (1), டகநரைன் ஜோடி துவக்கம் தந்தது. அதனாசே (4) ஏமாற்ற, ஹோப் 56 ரன் எடுத்தார். கேப்டன் ராஸ்டன் சேஸ், கிரீவ்ஸ் என இருவரும், மாட் ஹென்றி பந்தில் 'டக்' அவுட்டாகினர். டகநரைன் 52 ரன் எடுத்து வெளியேறினார். டெவின் (10) தவிர மற்றவர்கள் ஒற்றை இலக்க ரன் மட்டும் எடுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 167 ரன்னில் சுருண்டது. நியூசிலாந்தின் ஜேக்கப் டபி 5, ஹென்றி 3 விக்கெட் சாய்த்தனர். பின் களமிறங்கிய நியூசிலாந்து அணி 2வது நாள் முடிவில், 2வது இன்னிங்சில் 32/0 ரன் எடுத்து, 96 ரன் முன்னிலை பெற்றிருந்தது. தலாம் (14), கான்வே (15) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி