உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / துலீப் டிராபி: முஷீர் கான் சதம்

துலீப் டிராபி: முஷீர் கான் சதம்

பெங்களூரு: துலீப் டிராபியில் முஷீர் கான் சதம் விளாசினார்.இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், முதல் தர போட்டி தொடரான துலீப் டிராபி 61வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடக்கும் லீக் போட்டியில் இந்தியா 'ஏ', 'பி' அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற இந்தியா 'ஏ' அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது.இந்தியா 'பி' அணிக்கு யாஷஸ்வி ஜெய்ஸ்வால் (30) ஆறுதல் தந்தார். கேப்டன் அபிமன்யு (13) சர்பராஸ் கான் (9), ரிஷாப் பன்ட் (7), நிதிஷ் குமார் ரெட்டி (0), வாஷிங்டன் சுந்தர் (0), சாய் கிஷோார் (1) ஏமாற்றினார். இந்தியா 'பி' அணி 94 ரன்னுக்கு 7 விக்கெட்டை இழந்து திணறியது. தனிநபராக அசத்திய முஷீர் கான் சதம் கடந்தார்.முதல் நாள் முடிவில் இந்தியா 'பி' அணி முதல் இன்னிங்சில் 202/7 ரன் எடுத்திருந்தது. முஷீர் (105), சைனி (29) அவுட்டாகாமல் இருந்தனர்.அக்சர் ஆறுதல்: அனந்தபூரில் நடக்கும் மற்றொரு லீக் போட்டியில் இந்தியா 'சி', 'டி' அணிகள் விளையாடுகின்றன. 'டாஸ்' வென்ற இந்தியா 'சி' அணி 'பீல்டிங்' தேர்வு செய்தது. இந்தியா 'டி' அணிக்கு ஸ்ரேயாஸ் (9), தேவ்தத் படிக்கல் (0) ஏமாற்றினர். அக்சர் படேல் (86) கைகொடுக்க இந்தியா 'டி' அணி முதல் இன்னிங்சில் 164 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது.பின் முதல் இன்னிங்சை துவக்கிய இந்தியா 'சி' அணிக்கு கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (5), சாய் சுதர்சன் (7) ஏமாற்றினர். ஆட்டநேர முடிவில் இந்தியா 'சி' அணி 91/4 ரன் எடுத்திருந்தது. பாபா இந்திரஜித் (15), அபிஷேக் போரல் (32) அவுட்டாகாமல் இருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி