உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / துலீப் டிராபி: சுப்மன் அணி தோல்வி

துலீப் டிராபி: சுப்மன் அணி தோல்வி

பெங்களூரு: சுப்மன் கில் தலைமையிலான இந்தியா 'ஏ' அணி, 76 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.துலீப் டிராபி கிரிக்கெட் 61வது சீசன் நடக்கிறது. பெங்களூருவில் நடந்த லீக் போட்டியில் இந்தியா 'ஏ', 'பி' அணிகள் மோதின. முதல் இன்னிங்சில் இந்தியா 'பி' 321, இந்தியா 'ஏ' 231 ரன் எடுத்தன. மூன்றாம் நாள் முடிவில் இந்தியா 'பி' அணி 2வது இன்னிங்சில் 150/6 ரன் எடுத்திருந்தது.நான்காம் நாள் ஆட்டத்தில் ஆகாஷ் தீப் 'வேகத்தில்' வாஷிங்டன் சுந்தர் (9), சாய் கிஷோர் (0), நவ்தீப் சைனி (13) வெளியேறினர். கலீல் அகமது பந்தில் யாஷ் தயால் (16) அவுட்டானார். இந்தியா 'பி' அணி 2வது இன்னிங்சில் 184 ரன்னுக்கு 'ஆல்-அவுட்' ஆனது. இந்தியா 'ஏ' சார்பில் ஆகாஷ் தீப் 5, கலீல் அகமது 3 விக்கெட் சாய்த்தனர்.பின், 275 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்தியா 'ஏ' அணிக்கு மயங்க் அகர்வால் (3) ஏமாற்றினார். கேப்டன் சுப்மன் கில் (21), ரியான் பராக் (31) நிலைக்கவில்லை. லோகேஷ் ராகுல் (57), ஆகாஷ் தீப் (43) ஆறுதல் தந்தனர். துருவ் ஜுரெல் (0), தனுஷ் (0), ஷிவம் துபே (14), குல்தீப் யாதவ் (14) உள்ளிட்ட மற்றவர்கள் ஏமாற்றினர்.இந்தியா 'ஏ' அணி 2வது இன்னிங்சில் 198 ரன்னுக்கு 'ஆல்-அவுட்'டாகி தோல்வியடைந்தது. இந்தியா 'பி' சார்பில் யாஷ் தயால் 3, முகேஷ் குமார், நவ்தீப் சைனி தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !