எக்ஸ்டிராஸ்
* ஐ.சி.சி., சிறந்த வீராங்கனைக்கான விருதுக்கு (அக்டோபர்) இந்திய ‘ஆல்–ரவுண்டர்’ தீப்தி சர்மா, ஆஸ்திரேலியாவின் அனாபெல், வங்கதேசத்தின் சோபனா பரிந்துரை செய்யப்பட்டுள்ளனர். சமீபத்தில் ஜிம்பாப்வேக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சதம் விளாசினார் தீப்தி. * இந்துாரில் நடக்கவுள்ள உலக ஸ்னுாக்கர் சாம்பியன்ஷிப் (நவ. 12–21) தொடருக்கான இந்திய அணியில், மூன்று முறை சாம்பியன் பங்கஜ் அத்வானி, பெண்கள் ‘நடப்பு சாம்பியன்’ அனுபமா, மனன் சந்திரா, கீர்த்தனா, உமாதேவி உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். * தென் கொரியாவில் நடக்கும் கொரிய ஓபன் ‘சூப்பர் 500’ பாட்மின்டன், ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் தான்வி சர்மா 18–21, 12–21 என, ஜப்பானின் ஹினா அகேச்சியிடம் தோல்வியடைந்தார். மற்றொரு போட்டியில் இந்தியாவின் அன்மோல் கார்ப் 18–21, 18–21 என ஜப்பானின் அகானே யமாகுச்சியிடம் வீழ்ந்தார். * ஓமனில், 19 வயதுக்குட்பட்ட அணிகளுக்கான ஆசிய கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) 13வது சீசன் நடக்கிறது. இன்று நடக்கவுள்ள ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன. * கோவாவில் நடந்த ஐ.எஸ்.எல்., கால்பந்து லீக் போட்டியில், வடகிழக்கு யுனைடெட் அணி 2–0 என்ற கோல் கணக்கில் சர்ச்சில் பிரதர்ஸ் அணியை வென்றது. * டில்லியில், வரும் டிச. 13ல் நடக்கவுள்ள இந்தியா–இலங்கை அணிகள் மோதும் முதல் ஒருநாள் போட்டி, வானிலை காரணமாக விசாகப்பட்டினத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.