உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / சென்னையில் பைனல்: ஐ.பி.எல்., அட்டவணை வெளியீடு

சென்னையில் பைனல்: ஐ.பி.எல்., அட்டவணை வெளியீடு

புதுடில்லி: ஐ.பி.எல்., தொடருக்கான முழு அட்டவணை வெளியானது. பைனல் மார்ச் 26ல் சென்னையில் நடக்கிறது.இந்தியாவில் ஐ.பி.எல்., 17வது சீசன் மார்ச் 22ல் துவங்கியது. இதுவரை 6 போட்டிகள் முடிந்துள்ளன. லோக்சபா தேர்தல் காரணமாக முதல் 21 போட்டிகளுக்கான அட்டவணை மட்டும் வெளியானது. இதனால் மீதமுள்ள போட்டிகள் இந்தியாவில் நடத்தப்படுமா என்ற சந்தேகம் நிலவியது. இந்நிலையில் இத்தொடருக்கான முழு அட்டவணை வெளியிடப்பட்டது. இதன்படி பைனல் உட்பட அனைத்து போட்டிகளும் (74) இந்தியாவில் நடத்தப்படுகிறது.கடைசி லீக் போட்டி மே 19ல் நடக்கிறது. 'பிளே-ஆப்' சுற்றுப் போட்டிகள் ஆமதாபாத், சென்னையில் நடத்தப்படுகிறது. இதில் தகுதிச் சுற்று-1 (மே 21), 'எலிமினேட்டர்' (மே 22) போட்டிகள் ஆமதாபாத்தில் உள்ள உலகின் மிகப் பெரிய மோடி மைதானத்தில் நடக்கிறது. தகுதிச் சுற்று-2 (மே 24), பைனல் (மே 26) சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடக்கிறது. இதன்மூலம் ஐ.பி.எல்., பைனல் 3வது முறையாக சென்னையில் நடக்கவுள்ளது. இதற்கு முன் 2011, 2012ல் நடத்தப்பட்டது.சென்னை அணி சொந்த மண்ணில் தனது கடைசி லீக் போட்டியை மே 12ல் (எதிர்: ராஜஸ்தான்) விளையாடுகிறது. மே 18ல் பெங்களூருவில் நடக்கும் போட்டி இத்தொடரில் சென்னை அணி பங்கேற்கும் கடைசி லீக் போட்டியாகும். எஞ்சிய போட்டிகளுக்கான அட்டவணை.நாள் மோதும் அணிகள் இடம்மார்ச் 22 சென்னை - பெங்களூரு சென்னைமார்ச் 23* பஞ்சாப் - டில்லி மொகாலிமார்ச் 23 கோல்கட்டா - ஐதராபாத் கோல்கட்டாமார்ச் 24* ராஜஸ்தான் - லக்னோ ஜெய்ப்பூர்மார்ச் 24 குஜராத் - மும்பை ஆமதாபாத்மார்ச் 25 பெங்களூரு - பஞ்சாப் பெங்களூருமார்ச் 26 சென்னை - குஜராத் சென்னைமார்ச் 27 ஐதராபாத் - மும்பை ஐதராபாத்மார்ச் 28 ராஜஸ்தான் - டில்லி ஜெய்ப்பூர்மார்ச் 29 பெங்களூரு - கோல்கட்டா பெங்களூருமார்ச் 30 லக்னோ - பஞ்சாப் லக்னோமார்ச் 31* குஜராத் - ஐதராபாத் ஆமதாபாத்மார்ச் 31 டில்லி - சென்னை விசாகப்பட்டனம்ஏப். 1 மும்பை - ராஜஸ்தான் மும்பைஏப். 2 பெங்களூரு - லக்னோ பெங்களூருஏப். 3 டில்லி - கோல்கட்டா விசாகப்பட்டனம்ஏப். 4 குஜராத் - பஞ்சாப் ஆமதாபாத்ஏப். 5 ஐதராபாத் - சென்னை ஐதராபாத்ஏப். 6 ராஜஸ்தான் - பெங்களூரு ஜெய்ப்பூர்ஏப். 7* மும்பை - டில்லி மும்பைஏப். 7 லக்னோ - குஜராத் லக்னோஏப். 8 சென்னை - கோல்கட்டா சென்னைஏப். 9 பஞ்சாப் - ஐதராபாத் மொகாலிஏப். 10 ராஜஸ்தான் - குஜராத் ஜெய்ப்பூர்ஏப். 11 மும்பை - பெங்களூரு மும்பைஏப். 12 லக்னோ - டில்லி லக்னோஏப். 13 பஞ்சாப் - ராஜஸ்தான் மொகாலிஏப். 14* கோல்கட்டா - லக்னோ கோல்கட்டாஏப். 14 மும்பை - சென்னை மும்பைஏப். 15 பெங்களூரு - ஐதராபாத் பெங்களூருஏப். 16 குஜராத் - டில்லி ஆமதாபாத்ஏப். 17 கோல்கட்டா - ராஜஸ்தான் கோல்கட்டாஏப். 18 பஞ்சாப் - மும்பை மொகாலிஏப். 19 லக்னோ - சென்னை லக்னோஏப். 20 டில்லி - ஐதராபாத் டில்லிஏப். 21* கோல்கட்டா - பெங்களூரு கோல்கட்டாஏப். 21 பஞ்சாப் - குஜராத் மொகாலிஏப். 22 ராஜஸ்தான் - மும்பை ஜெய்ப்பூர்ஏப். 23 சென்னை - லக்னோ சென்னைஏப். 24 டில்லி - குஜராத் டில்லிஏப். 25 ஐதராபாத் - பெங்களூரு ஐதராபாத்ஏப். 26 கோல்கட்டா - பஞ்சாப் கோல்கட்டாஏப். 27* டில்லி - மும்பை டில்லிஏப். 27 லக்னோ - ராஜஸ்தான் லக்னோஏப். 28* குஜராத் - பெங்களூரு ஆமதாபாத்ஏப். 28 சென்னை - ஐதராபாத் சென்னைஏப். 29 கோல்கட்டா - டில்லி கோல்கட்டாஏப். 30 லக்னோ - மும்பை லக்னோமே 1 சென்னை - பஞ்சாப் சென்னைமே 2 ஐதராபாத் - ராஜஸ்தான் ஐதராபாத்மே 3 மும்பை - கோல்கட்டா மும்பைமே 4 பெங்களூரு - குஜராத் பெங்களூருமே 5* பஞ்சாப் - சென்னை தர்மசாலாமே 5 லக்னோ - கோல்கட்டா லக்னோமே 6 மும்பை - ஐதராபாத் மும்பைமே 7 டில்லி - ராஜஸ்தான் டில்லிமே 8 ஐதராபாத் - லக்னோ ஐதராபாத்மே 9 பஞ்சாப் - பெங்களூரு தர்மசாலாமே 10 குஜராத் - சென்னை ஆமதாபாத்மே 11 கோல்கட்டா - மும்பை கோல்கட்டாமே 12* சென்னை - ராஜஸ்தான் சென்னைமே 12 பெங்களூரு - டில்லி பெங்களூருமே 13 குஜராத் - கோல்கட்டா ஆமதாபாத்மே 14 டில்லி - லக்னோ டில்லிமே 15 ராஜஸ்தான் - பஞ்சாப் கவுகாத்திமே 16 ஐதராபாத் - குஜராத் ஐதராபாத்மே 17 மும்பை - லக்னோ மும்பைமே 18 பெங்களூரு - சென்னை பெங்களூருமே 19* ஐதராபாத் - பஞ்சாப் ஐதராபாத்மே 19 ராஜஸ்தான் - கோல்கட்டா கவுகாத்திமே 21 தகுதிச் சுற்று-1 ஆமதாபாத்மே 22 'எலிமினேட்டர்' ஆமதாபாத்மே 24 தகுதிச் சுற்று-2 சென்னைமே 26 பைனல் சென்னைபோட்டிகள் இரவு 7:30 மணிக்கு துவங்கும்.* மதியம் 3:30 மணிக்கு துவங்கும் போட்டிகள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை