உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா ஏ பெண்கள் அணி வெற்றி: உலக கோப்பை பயிற்சியில்

இந்தியா ஏ பெண்கள் அணி வெற்றி: உலக கோப்பை பயிற்சியில்

பெங்களூரு: உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்தியா 'ஏ' பெண்கள் அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் நியூசிலாந்தை வீழ்த்தியது.இந்தியா, இலங்கையில், வரும் செப். 30ல் பெண்களுக்கான ஐ.சி.சி., உலக கோப்பை (50 ஓவர்) 13வது சீசன் துவங்குகிறது. 'நடப்பு சாம்பியன்' ஆஸ்திரேலியா, இந்தியா உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன. இதற்கு தயாராக ஒவ்வொரு அணியும் பயிற்சி ஆட்டத்தில் விளையாடுகின்றன.பெங்களூருவில் நடந்த பயிற்சி போட்டியில் இந்தியா 'ஏ', நியூசிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த நியூசிலாந்து அணிக்கு கேப்டன் சோபி டெவின் (34), புரூக் ஹாலிடே (22), மேடி கிரீன் (30), ஜெஸ் கெர் (33) ஓரளவு கைகொடுத்தனர். அபாரமாக ஆடிய இசபெல்லா (101*) சதம் விளாசினார்.நியூசிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 273 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் சயாலி 3 விக்கெட் சாய்த்தார்.ஷைபாலி அரைசதம்: சவாலான இலக்கை விரட்டிய இந்தியா 'ஏ' அணிக்கு ஷைபாலி வர்மா (70) நம்பிக்கை தந்தார். ராகவி பிஸ்ட் (3), தனுஸ்ரீ (0) சோபிக்கவில்லை. இந்திய அணி 39.3 ஓவரில் 226/6 ரன் எடுத்திருந்த போது மழையால் போட்டி நிறுத்தப்பட்டது. கேப்டன் மின்னு மணி (39), மதிவாலா மமதா (56) அவுட்டாகாமல் இருந்தனர்.தொடர்ந்து மழை நீடித்ததால் போட்டியை தொடர முடியாத நிலை ஏற்பட்டது. இதனையடுத்து 'டக்வொர்த் லீவிஸ்' முறையில் இந்தியாவின் வெற்றிக்கு 40 ஓவரில், 224 ரன் என இலக்கு மாற்றப்பட்டது. ஏற்கனவே 226 ரன் எடுத்திருந்த இந்திய அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.இந்தியாவை வீழ்த்தியது இங்கிலாந்துபெங்களூருவில் நடந்த மற்றொரு பயிற்சி போட்டியில் இந்தியா, இங்கிலாந்து அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற இந்திய அணி கேப்டன் ஜெமிமா, 'பீல்டிங்' தேர்வு செய்தார். இங்கிலாந்து அணிக்கு அமி ஜோன்ஸ் (39), ஹீதர் நைட் (37) ஓரளவு கைகொடுத்தனர். சதம் கடந்த கேப்டன் நாட் சிவர்-புருன்ட் (120) 'ரிட்டயர்டு அவுட்' ஆனார். எம்மா லம்ப் (84) அரைசதம் விளாசினார்.இங்கிலாந்து அணி 50 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 340 ரன் எடுத்தது. இந்தியா சார்பில் கிராந்தி 3 விக்கெட் சாய்த்தார்.கடின இலக்கை விரட்டிய இந்திய அணி 34 ஓவரில் 187 ரன்னுக்கு சுருண்டு 153 ரன் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் (66), உமா செத்ரி (45) ஓரளவு கைகொடுத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி