உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / ரகசியமாக பயிற்சி செய்யும் இந்தியா: பெர்த்தில் நடப்பது என்ன

ரகசியமாக பயிற்சி செய்யும் இந்தியா: பெர்த்தில் நடப்பது என்ன

பெர்த்: இந்திய வீரர்கள் ரகசியமாக பயிற்சி மேற்கொள்வதாக வெளியான செய்தியை பி.சி.சி.ஐ., மறுத்துள்ளது.ஆஸ்திரேலியா சென்றுள்ள இந்திய அணி, 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட 'பார்டர்- - கவாஸ்கர்' டிராபி தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட், பெர்த்தில் உள்ள புதிய ஆப்டஸ் மைதானத்தில் நவ. 22ல் துவங்குகிறது. இதற்காக பயிற்சியாளர் காம்பிர் அடங்கிய இந்திய அணியினர் பெர்த்தில் முகாமிட்டுள்ளனர். இங்குள்ள பழைய வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய கிரிக்கெட் சங்க மைதானத்தில் பயிற்சியை துவக்கியுள்ளனர்.அனுமதி இல்லைஇது குறித்து 'தி ஆஸ்திரேலியன்' பத்திரிகை வெளியிட்ட செய்தியில்,''இந்திய வீரர்கள் ரகசியமாக பயிற்சியில் ஈடுபட விரும்புகின்றனர். இதனால் வெஸ்டர்ன் ஆஸ்திரேலிய மைதானத்தின் வெளிப்புறம் கருப்பு துணியால் மறைக்கப்பட்டுள்ளது. மைதானத்தில் புனரமைப்பு பணிகள் நடக்கின்றன. இதில் ஈடுபட்டுள்ள பணியாளர்களுக்கு அனுப்பிய 'இ-மெயில்' விபரம் கசிந்துள்ளது. அதில், 'இந்திய வீரர்களின் பயிற்சியை பார்க்க வேண்டாம், போட்டோ எடுக்க வேண்டாம், மைதானத்திற்கு மேலே 'டிரோன்' பறக்கவிட வேண்டாம்' என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். ரசிகர்களுக்கும் அனுமதி இல்லை,' என தெரிவிக்கப்பட்டுள்ளது. பி.சி.சி.ஐ., மறுப்புஇதை இந்திய கிரிக்கெட் போர்டு(பி.சி.சி.ஐ.,) மறுத்துள்ளது. பி.சி.சி.ஐ., அதிகாரி ஒருவர் கூறுகையில்,''ரகசியமாக பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என இந்தியா தரப்பில் எவ்வித கோரிக்கையும் விடுக்கப்படவில்லை. பயிற்சியை அனைவரும் பார்க்கலாம். இந்தியா, ஆஸ்திரேலியா 'மீடியா'வுக்கு அனுமதி உண்டு. அவர்கள் விரும்பும் வரை போட்டோ, செய்தி சேகரிக்கலாம். எந்தவிதமான கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. இந்தியா, இந்தியா 'ஏ' அணிகள் இடையே நடக்க இருப்பது அதிகாரப்பூர்வ மூன்று நாள் முதல் தர போட்டி (நவ. 15-17), கிடையாது. மைதானத்தின் மையப்பகுதியில் உள்ள ஆடுகளத்தில், வீரர்கள் பயிற்சி மேற்கொள்வர். ஒருவர் முதல் ஓவரிலேயே அவுட்டாகிவிட்டால், பின்னர் பேட் செய்ய முடியாது என்ற நிபந்தனை எதுவும் இல்லை. ஒரு அணியில் பேட்டர்கள் இருப்பர். மற்றொரு அணியில் பவுலர்கள் இருப்பர். முகமது சிராஜ், ஆகாஷ் தீப் போன்றோர் கோலி, ரிஷாப் பன்ட்டிற்கு பந்துவீசுவர். மொத்தத்தில் வீரர்களுக்கு சிறந்த பயிற்சியாக அமையும்,''என்றார். கோலி ஆர்வம்பெர்த்தில் நடந்த வலை பயிற்சியில் கோலி நீண்ட நேரம் பங்கேற்றார். சமீப காலமாக பேட்டிங்கில் தடுமாறும் இவர், ஆஸ்திரேலிய மண்ணில் அசத்த காத்திருக்கிறார். ரவிந்திர ஜடேஜா, பும்ரா, அஷ்வின், ரிஷாப் பன்ட், ஜெய்ஸ்வால் உள்ளிட்டோரும் பயிற்சியில் ஈடுப்பட்டனர். உடன் இந்தியா 'ஏ' அணி வீரர்களும் கலந்து கொண்டனர். மும்பையில் ரோகித்கேப்டன் ரோகித் சர்மாவின் மனைவி ரித்திகாவுக்கு விரைவில் இரண்டாவது குழந்தை பிறக்க உள்ளது. இந்த நேரத்தில் மனைவியுடன் இருக்க ரோகித் விரும்புகிறார். இதனால் ஆஸ்திரேலியா செல்லவில்லை. மும்பை கிரிக்கெட் சங்க மைதானத்தில் அவ்வப்போது பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஒருவேளை முதல் டெஸ்டில் இருந்து ரோகித் விலகினால், இந்திய அணி கேப்டன் பொறுப்பை பும்ரா ஏற்பார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !