உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / பிற விளையாட்டு / உலக விளையாட்டு செய்திகள்

உலக விளையாட்டு செய்திகள்

சீனதைபே வீராங்கனை ஓய்வுசீனதைபே சிட்டி: சீனதைபே வீராங்கனை டாய் டிசூ-யிங் 31, சர்வதேச பாட்மின்டன் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்தார். டோக்கியோ ஒலிம்பிக், உலக சாம்பியன்ஷிப் அரங்கில் பதக்கம் வென்ற இவர், 17 முறை 'வேர்ல்டு டூர்' தொடர்களில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.ஜோகோவிச் முன்னேற்றம்ஏதென்ஸ்: கிரீசில் நடக்கும் ஹெலனிக் சாம்பியன்ஷிப் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் ஜெர்மனியின் யானிக் ஹான்ப்மேனை வீழ்த்தி, பைனலுக்கு முன்னேறினார்.பிரேசில் அணி கலக்கல்அல் ரய்யான்: கத்தாரில் நடக்கும் 17 வயதுக்கு உட்பட்டோருக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து லீக் போட்டியில் பிரேசில் அணி 4-0 என இந்தோனேஷியாவை வீழ்த்தியது. தொடர்ந்து 2வது வெற்றியை பதிவு செய்த பிரேசில் அணி 'நாக்-அவுட்' சுற்றுக்குள் நுழைந்தது.உஸ்பெகிஸ்தான் 7வது இடம்அம்மான்: ஜோர்டானில், பெண்களுக்கான (16 வயது) ஆசிய வாலிபால் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதன் 7-8 வது இடத்துக்கான போட்டியில் உஸ்பெகிஸ்தான், ஹாங்காங் அணிகள் மோதின. இதில் உஸ்பெகிஸ்தான் 3-1 (25-12, 25-23, 15-25, 25-18) என வெற்றி பெற்றது.எக்ஸ்டிராஸ்* செஸ் அரங்கில் 'கிராண்ட்மாஸ்டர்' அந்தஸ்து பெற்ற 91வது இந்தியரானார் வி.எஸ். ராகுல் 21. பிலிப்பைன்சில் நடந்த ஆசியான் தனிநபர் சாம்பியன்ஷிப் தொடரில் கோப்பை வென்ற இவர், இதற்கான தகுதி புள்ளியை பெற்றார்.* மலேசியாவில் 'லான் பவுல்ஸ்' உலக கோப்பை தொடர் நடந்தது. 'பாரா' ஆண்கள் ஒற்றையர் பைனலில் இந்தியாவின் உத்பால் பாசுமதாரி ('பாரா' ஒற்றையர் பிரிவு), தினேஷ் குமார் (ஒற்றையர் பிரிவு) வெள்ளி வென்றனர்.* ஜப்பான் தலைநகர் டோக்கியோவில், காது கேளாதோர் ஒலிம்பிக் போட்டி (நவ. 15 - டிச. 26) நடக்கவுள்ளது. இந்தியா சார்பில் 73 வீரர், வீராங்கனைகள், தடகளம், பாட்மின்டன், டேபிள் டென்னிஸ், கோல்ப் உள்ளிட்ட 11 வகையான போட்டிகளில் பங்கேற்கின்றனர்.* ஹாங்காங் சிக்சஸ் கிரிக்கெட் தொடருக்கான லீக் போட்டியில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ், குவைத் அணிகளிடம் தோல்வியடைந்த தினேஷ் கார்த்திக் தலைமையிலான இந்திய அணி, அரையிறுதி வாய்ப்பை இழந்து வெளியேறியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை