உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியா உலக சாம்பியன்: பாகிஸ்தானை வீழ்த்தியது

இந்தியா உலக சாம்பியன்: பாகிஸ்தானை வீழ்த்தியது

பர்மிங்காம்: 'லெஜண்ட்ஸ்' உலக சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணி கோப்பை வென்றது. பைனலில், 5 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தானை வீழ்த்தியது. ஓய்வு பெற்ற வீரர்கள் பங்கேற்ற 'லெஜண்ட்ஸ்' உலக சாம்பியன்ஷிப் ('டி-20') முதல் சீசன் இங்கிலாந்தில் நடந்தது. பர்மிங்காமில் நடந்த பைனலில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பாகிஸ்தான் அணிக்கு கம்ரான் அக்மல் (24), ஷர்ஜீல் கான் (12) சுமாரான துவக்கம் கொடுத்தனர். சோயப் மாலிக் (41) ஓரளவு கைகொடுத்தார். கேப்டன் யூனிஸ் கான் (1), மிஸ்பா உல் ஹக் (18) சோபிக்கவில்லை. பாகிஸ்தான் அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன் எடுத்தது. அப்ரிதி (4), தன்வீர் (19) அவுட்டாகாமல் இருந்தனர். இந்தியா சார்பில் அனுரீத் சிங் 3 விக்கெட் சாய்த்தார்.எட்டக்கூடிய இலக்கை விரட்டிய இந்திய அணிக்கு ராபின் உத்தப்பா (10), சுரேஷ் ரெய்னா (4) ஏமாற்றினர். அபாரமாக ஆடிய அம்பதி ராயுடு, 30 பந்தில் 50 ரன் (2 சிக்சர், 5 பவுண்டரி) விளாசினார். குர்கீரத் சிங் மான் (34), யூசுப் பதான் (30) நம்பிக்கை தந்தனர். தன்வீர் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய இர்பான் பதான் வெற்றியை உறுதி செய்தார்.இந்திய அணி 19.1 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 159 ரன் எடுத்து வெற்றி பெற்றது. கேப்டன் யுவராஜ் சிங் (15), இர்பான் பதான் (5) அவுட்டாகாமல் இருந்தனர். இதன்மூலம் லீக் சுற்றில் பாகிஸ்தானிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுத்தது இந்தியா.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி