உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / வருண் சக்ரவர்த்தி வாய்ப்பு * இந்திய அணி அறிவிப்பு

வருண் சக்ரவர்த்தி வாய்ப்பு * இந்திய அணி அறிவிப்பு

புதுடில்லி: வங்கதேசத்திற்கு எதிரான 'டி-20' தொடரில் பங்கேற்கும் இந்திய அணியில் வருண் சக்ரவர்த்தி சேர்க்கப்பட்டார்.இந்தியா வந்துள்ள வங்கதேச அணி, 3 போட்டி கொண்ட 'டி-20' தொடரில் பங்கேற்கிறது. போட்டிகள் குவாலியர் (அக். 6), டில்லி (அக். 9), ஐதராபாத்தில் (அக். 12) நடக்கவுள்ளன. இதற்கான 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டது. சூர்யகுமார் கேப்டனாக தொடர்கிறார். தமிழகத்தின் 'ஆல் ரவுண்டர்' வாஷிங்டன் சுந்தர், சுழற்பந்துவீச்சாளர் வருண் சக்ரவர்த்திக்கு அணியில் இடம் கிடைத்துள்ளது. இவர், 2021, நவ. 5க்குப் பின் அணிக்கு திரும்பியுள்ளார்.விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன், ஜிதேஷ் சர்மா தேர்வு செய்யப்பட்டனர். எதிர்பார்க்கப்பட்ட இஷான் கிஷானுக்கு அணியில் இடம் இல்லை. அணி:சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், ஹர்திக் பாண்ட்யா, ரியான் பராக், நிதிஷ் குமார் ரெட்டி, ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், ரவி பிஷ்னோய், வருண் சக்ரவர்த்தி, ஜிதேஷ் சர்மா, அர்ஷ்தீப் சிங், ஹர்ஷித் ராணா, மயங்க் யாதவ்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை