உள்ளூர் செய்திகள்

/ விளையாட்டு / கிரிக்கெட் / இந்தியாவை வெல்லுமா ஆஸி., * ரிக்கி பாண்டிங் உறுதி

இந்தியாவை வெல்லுமா ஆஸி., * ரிக்கி பாண்டிங் உறுதி

துபாய்: ''வரும் டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-1 என இந்தியாவை வீழ்த்தும்,'' என பாண்டிங் தெரிவித்துள்ளார். இந்தியா, ஆஸ்திரேலிய இடையில் 'பார்டர் கவாஸ்கர்' டிராபி டெஸ்ட் தொடர் நடத்தப்படுகிறது. கடந்த 2018-19ல் அசத்திய இந்திய அணி, 72 ஆண்டு வரலாற்றில் முதன் முறையாக ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்றியது. பின் 2020-21 தொடரில் சிறப்பாக செயல்பட்ட இந்தியா, அடுத்தடுத்த தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் டெஸ்ட் கோப்பை வென்றது. இம்முறை 1992க்குப் பின் முதன் முறையாக இரு அணிகள் ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் மோத உள்ளன. இதற்காக இந்திய அணி, ஆஸ்திரேலியா செல்லவுள்ளது. முதல் டெஸ்ட், பெர்த்தில் நவ. 22-26ல் நடக்கிறது. மீதமுள்ள போட்டிகள் அடிலெய்டு (டிச. 6-10), பிரிஸ்பேன் (டிச. 14-18), மெல்போர்ன் (டிச. 26-30), சிட்னியில் (2025, ஜன. 3-7) நடக்கவுள்ளன.இதுகுறித்து ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கூறியது:இரு அணிகள் மீண்டும் ஐந்து போட்டி கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளன. இத்தொடரில் அதிக போட்டி 'டிரா' ஆகுமா எனத் தெரியவில்லை. இருப்பினும் கடந்த இரு தொடர் போல இம்முறை இருக்காது. மோசமான வானிலை காரணமாக போட்டி பாதிக்கப்பட்டால் 'டிரா' ஆகலாம். மற்றபடி இத்தொடரில் ஆஸ்திரேலிய அணி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெறும்.ஏனெனில் ஆஸ்திரேலிய அணி ஏற்னவே 'செட்' ஆகியுள்ளது. இப்போதைக்கு அணியின் துவக்க வீரராக ஸ்மித் களமிறங்குவாரா, இல்லையா என்பது தான் கேள்வியாக உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை